தனது லாங் மார்ச்-8 ராக்கெட் மூலம் 22 செயற் கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை புரிந்துள்ளது. ஒரு ராக்கெட்டைப் பயன்படுத்தி இவ்வளவு எண்ணிக்கையில் செயற்கைக் கோள்களை சீனா ஏவுவது இதுவே முதன்முறையாகும். கடல்சுற்றுச் சூழல், காடுகளில் தீப்பிடிப்பதைத் தடுத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய நோக்கங்களுக்காக இந்த 22 செயற்கைக்கோள்கள் பயன்படப் போகின்றன.
நீண்டகாலத்திற்குப் பிறகு கொரோனா மரணங் கள் இல்லாத நாட்களை கியூபா மகிழ்ச்சியுடன் சந்தித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து எந்த ஒரு மரணமும் நிகழவில்லை. கடந்த இரண்டாண்டுகளில் 8 ஆயிரத்து 494 பேர் கியூபா வில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்திருக்கி றார்கள். தற்போது 2 ஆயிரத்து 508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரையில் 98 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மூன்று தடுப் பூசிகளை உள்நாட்டிலேயே கியூபா உருவாக்கி யுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 25, 2023 அன்று புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என்று நைஜீரியா அறிவித்துள்ளது. அதே நாளில் இண்டு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றத்திற் கும் தேர்தல் நடைபெறும். ஆளுநர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் மார்ச் 11, 2023 அன்று நடக்கவிருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத் தில் மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு நைஜீரியாவாகும்.