tamilnadu

img

தீக்கதிர் சந்தாவுக்காக சிறு சேமிப்பை வழங்கிய குழந்தைகள்

தீக்கதிர் சந்தாவுக்காக  சிறு சேமிப்பை வழங்கிய குழந்தைகள்

திண்டுக்கல், ஜூலை 14 - திண்டுக்கல் மாநகரத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வரு கிறது. இந்த இயக்கத்தில் தீக்கதிர் முதன்மை  பொது மேலாளர் என்.பாண்டி பங்கேற்றார்.  பழனி ரோடு 10 ஆவது வார்டு அய்யங் குளத்தில் தீக்கதிர் சந்தா சேகரிக்கச் சென்ற  போது, கட்சியின் மாநகர் குழு உறுப்பினர் டியாகு எமர்சனின் மகன்கள் 5  ஆம் வகுப்பு படிக்கும்  ஜோயல், 2 ஆம் வகுப்பு படிக்கும் ஹெர்மன் ஆகி யோர் தங்களது சிறு சேமிப்புப் பணம் ரூ.2,300-ஐ தீக்கதிர் ஆண்டு சந்தா தொகை யாக வழங்கினர். ஜோயல் செந் தொண்டர் அணியில் உள்ளார்.  ஜோயல், ஹெர்மன் வழங்கிய சந்தா தொகையை என்.பாண்டி  பெற்றுக்கொண்டார். இதில் டியாகு எமர்சனின் மனைவியும், மாதர் சங்க மாநகர்க்  குழு உறுப்பினருமான விநோதினி, சிபிஎம் மாநகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட் டக்குழு உறுப்பினர் கே.எஸ்.கணேசன் ஆகி யோர் உடனிருந்தனர்.