tamilnadu

img

நான் மாம்பழம் பேசுகிறேன் - உதயஷங்கர்

குழந்தைகளே! நான் மாம்பழம் பேசுகிறேன். 
உங்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் 
இல்லையா? 
பிஞ்சாக இருக்கும்போது துவர்ப்பாக இருப்பேன். அப்போதும் சாப்பிடுவீர்கள். வீட்டில் அம்மா வடுமாங்காய் ஊறுகாய் போடுவார். கொஞ்சம் வளர்ந்தவுடன் புளிப்புச் சுவை கூடிவிடும். பல் கூசும் அளவுக்குப் புளிப்பாக இருப்பேன். பல் 
கூசும் புளிப்புக்காகவே சிலர் சாப்பிடு
வார்கள். நாக்கைச் சப்புக்கொட்டி நீங்கள் 
சாப்பிடும்போது எனக்கே ஆசையாக இருக்கும்.
இன்னும் கொஞ்சம் வளர்ந்து முற் றும்போது போது உப்பு மிளகாய்த்தூள் தூவிச் சாப்பிடுவீர்கள். மெல்ல என் தோல் மீது மஞ்சள் நிறம் படரும். கடின
மாக இருந்த நான் மிருதுவாக மாறு
வேன். நன்றாகப் பழுத்து விட்டால் முழுவது
மாக மஞ்சள் நிறத்திற்கு மாறி விடுவேன். 
பிறகு கடைகளுக்குக் கொண்டு போய் 
விற்பனைச் செய்வார்கள்.
ஆனால் நான் எங்கிருந்து வருகிறேன் தெரியுமா?
நீங்கள் என்னுடைய இனிப்பான சதைப்பற்றைச் சாப்பிட்டு விட்டு கொட்டை
யைத் தூக்கி வீசுகிறீர்கள். அந்தக் கொட்டையை மண்ணில் ஊன்றினால் கன
மான கொட்டை ஓடுகளுக்குள் விதைக்குள் 
நான் இருப்பேன். இவ்வளவு பெரிய மரம் 
எப்படி அத்தனை சிறிய விதைக்குள் இருக் 
கும் என்று ஆச்சரியப்படுகிறீர்கள்தானே.
இயற்கையன்னையின் மாயம் அது.
நீரை உறிஞ்சி பெரிதாகி ஓடுகளை உடைத்துக் கொண்டு வெளியில் வரு
வேன். இளம் தளிரிலைகளை விரித்து இந்த 
உலகத்தைப் பார்ப்பேன். நீரையும், மண்ணி
லிருந்து சத்துகளையும், சூரியவெளிச்சத் தையும் கொண்டு பச்சையம் என்ற உணவு 
தயாரிப்பேன். புதிது புதிதாகக் கிளைகள் தோன்றும்.
அதன்பிறகு செடியாக மாறுவேன். 
குட்டி மரமாக மாறுவேன்.
பிறகு என்னுடைய உடலின் தோல் தடி
மனாகும். நான் முழுவதும் வளர்ந்தபிறகு எனக்குள் இயற்கையின் மாற்றம் நடக்கும். ஆமாம். குட்டிக்குட்டியாய் வெள்ளை 
நிறத்தில் பூக்கள் பூக்கும். 
மாம்பூக்களின் மணத்தைக் காற்றில் பரப்புவேன். 
தேனீக்களையும், ஈக்களையும், எறும்பு
களையும் பூச்சிகளையும் அழைப்பேன். எல்லாரும் என் அழைப்பை ஏற்று வரு
வார்கள். என் பூக்களிலுள்ள தேனைக் குடிப்பார்கள். 
அப்படியே மகரந்தச் சேர்க்கை நடக்க 
உதவி செய்வார்கள். 
சில நாட்களில் குட்டிக்குட்டிப் பிஞ்சுகள் 
பச்சை நிறத்தில் உருவாகும். பிஞ்சாக இருக்கும்போது துவர்ப்பாக இருப்பேன். அவை வளர்ந்து கரும்பச்சை நிறத்துக்கு மாறும். நான் கிளைகள் தோறும் குண்டு குண்டு மாங்காய்களுடன் குலுங்கிக் கொண்டிருப்பேன். 
மெல்ல மெல்ல என்னுடைய நிறம் பொன்மஞ்சள் நிறத்துக்கு மாறத் தொடங்கும். அணில்கள் ஓடிவரும். இரவில் வௌவால்கள் வரும். பச்சைக் கிளிகள் பறந்து வரும்.
குழந்தைகள் வருவார்கள். 
மரம் ஏறிப் பறிப்பார்கள். 
கல்லை எறிந்து பறிப்பார்கள்.
மஞ்சள் நிறத்துக்கு மாறியதும் கடை
களில் விற்பனைக்குச் சென்று விடுவேன். இனிப்புச் சுவையுடன் இருப்பேன். 
அங்கிருந்து தான் உன்னுடைய அப்பா 
உனக்காக வாங்கி வந்தார். 
நானும் இதோ பட்டுக்குட்டியின் வாயில் 
அப்படியே 
க…. ரை… ந்…து போ…ய்…க்…கொ..ண்..டி..ரு..க்..கி..றே..ன்.
இ..து..தான்..எ….ன்..னு..டை..ய..க..தை.