முதலமைச்சர் இன்று இராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம்
சென்னை, அக். 2 - முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பதற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இராமநாதபுரம் செல்கிறார். வியாழனன்று (அக்.2) சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவருக்கு திமுக சார்பில் பார்த்திபனூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த முதலமைச்சர் வெள்ளிக்கிழமை பேராவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.