சென்னை, மார்ச் 7- ரஷ்யா-உக்ரைன் போரால் பாதிக்கப் பட்டு தாயகம் திரும்பிய மருத்துவ மாண வர்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘‘போர் தொடங்கியதிலிருந்து இது வரை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாண வர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய மாணவர்களின் படிப்பு சீர்குலைந்துள்ளது. அவர்களின் எதிர்காலம் அச்சுறுத்தலில் உள்ளது. தற்போதைய சூழலில் நாடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் சென்று படிப்பை தொடர்வது சாத்தியமில்லை. எனவே, நாடு திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரி களில் படிப்பை தொடர உடனடி தீர்வு தேவை. மாணவர்களின் படிப்பு விவகா ரத்தில் இந்திய அரசு எடுக்கும் முயற்சி களுக்கு தமிழக அரசு ஆதரவு தரும் என உறுதியளித்தார். மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பை தொடர்வதில் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையை தீர்க்க பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தப்பட்டாலும் பல்கலைக் கழகங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையிலும் நிச்சயமற்ற தன்மை நிலவும்’’. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.