திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ போன்ற முகாம்களில் கலந்து கொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிரை சேர்த்திடும் வகையில், மேற்காணும் முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகுதியுள்ள மகளிர் அனை வருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். “நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாட்கள் தங்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கான தேவையான பணிகளை செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள் பற்றிய அறிக்கையை, 15 நாட்களுக்கு ஒரு முறை தனக்கு அளிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தி னார்.
செப்.25, 27 நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: செப்டம்பர் 25, 27 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா வடமேற்கு வங்கக்கடல் பகுதி களில் நிலவுகிறது. செப்.25 ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு திசையில் நகர்ந்து, செப்.26 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். செப்.27 அன்று தெற்கு ஒரிசா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கக் கூடும். எனவே, செப். 26 அன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
8 ஆவது முறையாக விருது பெற்ற தமிழ்நாடு
சென்னை, செப்.23 - தமிழகம் தொடர்ந்து 8 ஆவது முறை யாக சிறந்த உடல் உறுப்பு தானத்திற்கான விருதை பெற்றுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத் தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் ‘உறுப்பு தான தினம்-2025’ உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்தல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணி யாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவிக்கையில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2008 செப்.5 ஆம் தேதி மூளைச் சாவடைந்த வர்களிடமிருந்து உடலுறுப்பு பெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணை யம் உருவானது. 2024 ஆம் ஆண்டில் 268 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதனை பாராட்டி ஒன்றிய அரசு, உடலுறுப்பு தானத் தில், சிறந்த மாநிலம் என்ற விருது அளித்து உள்ளது. தொடர்ந்து 8 ஆவது முறையாக தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது. இதுவரை 522 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார் கள். 23,189 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்து வக் கல்லூரிகளில் உடல் உறுப்பு தானம் அளித்தவர்களின் பெயர்கள் கொண்ட ஒரே மாதிரியான கல்வெட்டை வைக்கும் பணியை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளோம்” என்றார்.
ஆளில்லா ககன்யான் ராக்கெட் டிசம்பரில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்
சென்னை: ஆளில்லா ககன்யான் ராக் கெட்டை வரும் டிசம்பருக்குள் அனுப்ப திட்ட மிட்டுஉள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாரா யணன் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடி அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த 19 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாசாவும், இஸ்ரோவும் இணைந்து விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 2026 மார்ச் 7 முதல், 8 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முயற்சி செய்து வருகிறோம். முக்கியமாக ஆளில்லா ககன்யான் ராக்கெட்டை வரும் டிசம்பரில் அனுப்ப திட்ட மிட்டுள்ளோம். அதன் வெற்றியை தொ டர்ந்து, 2027-இல் இந்தியாவில் தயாரித்த ராக்கெட் மூலம், இந்திய விண்வெளி வீரர் களை அனுப்பி திரும்பி கொண்டு வரு வோம்” என்று தெரிவித்தார். தனியார் தொழிற்சாலைகளில் 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் முதல் ராக்கெட்டை வரும் மார்ச் மாதம் அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். வயோ மித்ரா திட்டத்தில் பெண் ரோபோவை முதல் ஆளில்லா ராக்கெட்டில் அனுப்ப உள்ளதாக வும் நாராயணன் கூறினார்.
விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா என்கிற பி.சத்தியநாராயணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. 2011-2016 காலத்தில் சென்னை மாநகர கவுன்சிலராகவும், 2016-2021 காலத்தில் எம்எல்ஏவாகவும் இருந்த சத்யா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமா னத்துக்கு அதிகமாக 2 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பு சொத்து சேர்த்ததாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான தலைமை குற்றவி யல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “இந்த இரண்டு வழக்குகளிலும் புலன் விசாரணை முடிந்து விட்டது. வழக்கு தொடர அரசின் அனுமதிகோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
டெண்டர் அறிவிப்பு
சென்னை: தமிழ கத்தில் தொலைதூர பய ணங்களுக்கு இயக்கப் படும் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணி களுக்கு குடிநீர் விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் வசதியை கருத் தில் கொண்டு, பேருந்து பயணத்தின் போது குடி நீர் தேவைப்பட்டால் பய ணிகளுக்கு விற்பனை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற் கான ஆரம்ப கட்ட நட வடிக்கையாக, ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களிட மிருந்து ஆன்-லைன் இ-டெண்டர் மூலம் விண்ணப்பங்களை அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகம் கோரி யுள்ளது.
இலங்கை பெண் கைதியிடம் விசாரணை
சென்னை: சென்னை புழல் பெண் கள் சிறையில் அமலாக் கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி னர். அப்போது இலங்கை யைச் சேர்ந்த கைதி மேரி பிரான்சிஸ்கோ என்பவரிடம், நீதிமன்ற உத்தரவின்படி விசா ரணை நடத்தப்பட்டது. எதற்காக நடத்தினர் என்பது பின்னர் தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறினர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பெண் கைதி யிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு எச்சரிக்கை
சென்னை: எம்பி பிஎஸ், பிடிஎஸ் மாணவர் களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. கட்டண நிர்ணய குழு நிர்ணயித் துள்ள கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண் டும். மாணவர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட கல்லூ ரிக்கு வழங்கப்பட்ட அங்கீ காரம் திரும்பப் பெறப்ப டும் என்றும், உச்சநீதி மன்ற உத்தரவு, தேசிய மருத்துவ ஆணைய விதி முறைகளின்படி மாண வர்களை சேர்க்க மறுக்கக் கூடாது என்று தமிழ்நாடு அறிவித் துள்ளது.