tamilnadu

நமச்சிவாயம் கருத்தால் முதல்வர் ரங்கசாமி கொதிப்பு

நமச்சிவாயம்  கருத்தால் முதல்வர்  ரங்கசாமி கொதிப்பு

புதுச்சேரி, ஆக.20  புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கொண்டு வர அனைவரும் சேர்ந்து பாடு பட வேண்டும் என அமைச்சர் நமச்சிவா யம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக நகர, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  புதன் கிழமை  நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான் குமார் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசி யது: “மற்ற அரசியல் கட்சிகளோடு மாறு பட்ட கட்சிதான் பாஜக.  விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். பாஜகவை பொறுத்த வரையில் கூட்டணி ஆட்சியிலும் பாஜக இருக்க வேண்டும். கட்சியை பலப்படுத் துவதோடு மட்டுமின்றி நம்முடைய ஆட்சியையும் கொண்டு வர அனை வரும் சேர்ந்து பாடுபட வேண்டும்” என்றார். இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள் ளது முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படையச் செய்து ள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே  ரங்கசாமி கட்சியை பாஜக மிரட்ட ஆரம்பித்து விட்டது.