tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்ரமணியன், அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் தங்கியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவ ருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப் பட்டன. இரண்டு நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும்” என்று  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவர் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

திருப்பூர் பயணம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோத னைகள் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடா மல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது எக்ஸ்  தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

50 எம்.பி.பி.எஸ் இடங்கள் குறைப்பு

சென்னை: தமிழகத்தில் 50 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய பாஜக அரசின்  மருத்துவக் கலந்தாய்வுக் குழு வெளியிட்ட அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு 150 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், இந்த ஆண்டு 100 ஆகக் குறைந்துள்ளன. மருத்துவ இடங்களை 250 ஆக உயர்த்தக் கோரி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்திருந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி 50 இடங்களை குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 766 கல்லூரிகளில் 1,15,900 எம்பிபிஎஸ் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட  மொத்தம் 77 கல்லூரிகளில், 12 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களுக்கு  இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

நவாஸ்கனி எம்.பி., கடிதம்

 சென்னை: புதுக் கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே காரணியேந்தல் கிரா மத்தில் கால்நடைகளை தேடிச் சென்ற பெண் மணி பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளாக்கப் பட்டு பாதிக்கப்பட்டுள் ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் குடும்பத் திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் எழுதி இருக்கிறார்.

தவெக மீது புகார்

 கோவை: தமிழக  வெற்றிக் கழகத்தி லிருந்து விலகி திமுகவில்  இணைந்த வைஷ்ணவி, “தனது படத்தை மார்பிங்  செய்து ஆபாசமாக, அவ தூறாக தமிழக வெற்றிக்  கழகத்தினர் சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்யும் வகையில் பதி விடுவதாக” கோவை மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். 

574 தற்காலிக விரிவுரையாளர்கள்

சென்னை: அரசு கலை, அறிவியல்-கல்வி யியல் கல்லூரிகளில் 574 தற்காலிக விரிவுரை யாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச் சர் கோவி.செழியன் தெரி வித்துள்ளார். தகுதி யுள்ள நபர்கள் www.tngasa.org என்ற இணைய தளத்தில் விண் ணப்பிக்கலாம்.