சென்னை, செப்.29- வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானி யான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக செப்.28 அன்று தேனாம் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந் தார். அவருக்கு வயது 98. சனிக்கிழமை (செப்.30) அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடைபெற வுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அஞ்ச லிக்காக அவரது உடல் தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று (செப்.29) நேரில் சென்று மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார். மேலும் எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சௌமியா சுவாமி நாதன் உள்ளிட்ட குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகி யோரும் அஞ்சலி செலுத்தி னர்.