tamilnadu

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு  உலகளாவிய அங்கீகாரம்  முதல்வர் பெருமிதம்

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு  உலகளாவிய அங்கீகாரம்  முதல்வர் பெருமிதம்

சென்னை, செப். 25 - தஞ்சாவூர் - புதுக்கோட்டை மாவட்டங்களையொட்டிய பாக். வளைகுடா பகுதியில் தமிழக அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்  துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் அறி வித்துள்ளார். பன்னாட்டு இயற்கைப் பாது காப்புச் சங்கத்தின் - 2025 அபுதாபி மாநாட்டுக்கு முன்னதாக நடந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதுதொடர்பாக தமது ‘எக்ஸ்’  சமூகவலைதளப் பக்கத்தில் பதி விட்டுள்ள முதல்வர், “இந்த முயற்சி யில் பங்கேற்ற தமிழக வனத்துறை, ஓம்கார் பவுண்டேஷன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அங்கீகாரம் தமிழகத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.