tamilnadu

img

வியட்நாம் நாட்டின் வின் பாஸ்ட் மின்சார வாகனத் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

வியட்நாம் நாட்டின் வின் பாஸ்ட் மின்சார வாகனத் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

தூத்துக்குடி, ஆக.4 - தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட் பகுதியில், வியட்நாம் நாட்டின் வின் பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப் பட்டது. தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முத லீட்டில் அமைக்கப்பட்ட கார் தொழிற்சாலையை திங்களன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆலையில் முதற்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தத் தொழிற்சாலை திறப்பு விழாவில் முதல மைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழகம் தான். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகனங் கள் உற்பத்தியில் 40 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆலைக்கு நான் அடிக்கல் நாட்டிய 17  மாதங்களில் தமிழகத்தில் நிறுவனத்தைத் தொடங்கி  பெருமை சேர்த்துள்ளார்கள். வியட்நாம் என்றாலே  வியப்புதான். தென் மாவட்டங்கள் தொழில் பகுதி யாக உருவாகும்” என்றார். தூத்துக்குடி வின் பாஸ்ட் ஆலையில் உற்பத்தி  செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை முதலமைச்சர் ஸ்டாலின் தொ டங்கி வைத்தார்.  இதில், அமைச்சர்கள்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.  ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், பி.கீதா ஜீவன்,  அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், டி.ஆர்.பி.ராஜா, மக்களவை உறுப்பினர் கனி மொழி, தலைமைச் செயலாளர் நா.முருகா னந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாகன உற்பத்தியின்  தலைநகரம் தமிழ்நாடு இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலை நகரம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறினார்.  நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 200  பேர் இந்த ஆலையில் பணிபுரிய உள்ளனர். இந்த  தொழிற்சாலை மூலம் தூத்துக்குடி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 90 சதவீதம் பேர்  வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார். மேலும், தூத்துக்குடியில் நடைபெற்ற முத லீட்டாளர் மாநாட்டில் ரூ.32,554 கோடி மதிப்பிலான  41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் நடைபெற்ற இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள்  மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.