tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

2026 சட்டமன்றத் தேர்தல்  திமுக நிர்வாகிகளுடன்  முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல்  2026-இல் நடைபெற உள்ள நிலையில், ‘உடன்பிறப்பே  வா’ என்ற தலைப்பில் திமுக தலைவரும் முதல மைச்சருமான மு.க. ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது மீண்டும், கட்சி மற்றும் அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழ மையன்று சந்தித்தார். நிர்வாகிகளுடன் ஒருவருக்கு ஒருவர் என்ற வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடலில்  ஈடுபட்டார். தொகுதி களநிலவரம், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விவ காரங்கள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

ஆணவக் கொலைகளுக்கு காரணம் சமுதாய அமைப்பு கமல்ஹாசன் எம்.பி. கருத்து

சென்னை: மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி யேற்று, மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், “நாடாளுமன்றத்தை வெளியில் இருந்து பார்த்திருக்கிறோம். இப்போது உள்ளே இருந்து பார்க்கிறேன். நாடாளுமன்றத்தில் ஆற்ற வேண்டிய கடமை, பெருமை புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு, தமிழ்நாடு அதுதான் என் பொறுப்பு. அதற்காகவே சென்றிருக்கிறேன். சரிவர என் கட மையைச் செய்வேன்” என்று கூறினார்.  ஆணவக் கொலைகள் குறித்த கேள்விக்குப் பதி லளித்த அவர், “சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே  இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள்  அல்ல, சமுதாய அமைப்பு” என்று தெரிவித்தார்.

ராமதாஸ், அன்புமணி போட்டி அறிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராம தாஸ் உத்தரவுப்படி, திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண  மண்டபத்தில் ஆகஸ்ட் 17 அன்று காலை 10 மணிக்கு  சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.  இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர  நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், ராமதாஸ் நடத்துகின்ற கூட்டத் துக்குப் போட்டியாக- ஆகஸ்ட் 9-ஆம் தேதியே  பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பாமக  செயல் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், “பாமக  பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃ ப்ளூயன்ஸ் அரங்கில் ஆகஸ்ட் 9 அன்று நடைபெறும்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதூறாக பேச சீமானுக்கு தடை

சென்னை : பொதுவெளியில் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் சீமான் தனக்கு  ரூ.2.10 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்  என சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஐஜி வருண் குமார்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, தனக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து, டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நாதக தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமானுக்கு இடைக்காலத் தடை விதித்து  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றப் பிடிவாரண்டுகளை கறாராக செயல்படுத்த உத்தரவு

சென்னை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதி மன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களைத் தாமதப் படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்கு கள், பிடிவாரண்ட் நிலையில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1985-ஆம் ஆண்டு வழக்குகளும் உள்ளன. 1985 முதல் 2024 வரை 61 ஆயி ரத்து 301 வழக்குகளில் பிடிவாரண்ட்கள் அமல்படுத்தப் படவில்லை எனவும் தலைமைப் பதிவாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 61 ஆயிரம் வழக்குகளில் பல ஆண்டுகளாகப் பிடிவாரண்டை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து அதிர்ச்சியைத் தெரி வித்தார். இது நீதிபரிபாலன முறையைப் பலவீனப்படுத்தி விடும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, எதிர்காலத்தில் பிடி வாரண்ட்களைத் தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில்  அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார். இதேபோல மாநிலம் முழுவதும்  உள்ள நீதிமன்றங்களிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தலைமை நிர்வாக அதிகாரி யாக பணியாற்றி ஓய்வுபெற்ற மகேஷ் பாபுவை ஒருங்கிணைப்பு  அதிகாரியாக நியமித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

மேலும்  ஓராண்டு நீட்டிப்பு

சென்னை: வன்னி யர் உள் ஒதுக்கீடு வழங்கு வது குறித்து, பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் அர சுக்குப் பரிந்துரை அளிப்ப தற்கான கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை 11 ஆம்  தேதியுடன் கால அவகாசம்  முடிந்த நிலையில், தற் போது மேலும் ஓராண் டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: “தமிழ் மொழியில் சிறந்த படம் என்ற பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என  மூன்று விருதுகளை வென்றுள்ள பார்க்கிங் திரைப்படத்தின் திரைக்  கலைஞர்கள் அனைவருக் கும் கமல்ஹாசன் எம்.பி.,  வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

தந்தையையே வேவு பார்த்த மகன்

சென்னை: “என் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி  வைத்தது அன்புமணி தான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகனும்  பாமகவின் செயல் தலை வருமான அன்புமணி மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆக. 11 முதல் பி.இ. வகுப்புகள்  

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங் கும் நான்கு வளாக  கல்லூரிகளில் ஆகஸ்ட் 11 முதல், முதலாம் ஆண்டு  வகுப்புகள் தொடங்கும்;  அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18 முதல் வகுப்பு கள் துவங்கும், தன் னாட்சி கல்லூரிகளில் கல்லூரி திறப்பு தேதியை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.