அவதூறுக்கு முதலமைச்சர் கண்டனம்
சென்னை: தமிழக வளர்ச்சிக்கு காரணமான திமுக அரசு மீது சிலர் அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டியிருக்கும் முதலமைச்சர், அந்த அவதூறுகளை புறந்தள்ளி பய ணத்தை திமுக அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா வின் கூட்டாட்சி முறை, மாநில உரிமை காக்கப்பட திமுக அரசு தொடர்ந்து போராடுகிறது. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். மாநில அரசுகள் தம் வளர்ச்சிப் பாதையை தாங்களே வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். கல்வி, மருத்துவம் மாநில அரசுகளிடம்தான் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
‘அதிமுக கோமா நிலையில் உள்ளது’
சென்னை: சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்ட பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலில் 210 தொகுதி களில் வெல்வதாக கூறியிருப்பது குறித்து விமர்சனம் செய்தார். 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார். 234 தொகுதி களிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும். அதிமுக கோமா நிலையில் உள்ளது” என்று அவர் தெரிவித்தார். திமுகவை வசைபாடிய அண்ணா மலையே திமுக வலுவாக இருக்கிறது என பேசி இருப்பதை யும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து கேட்பு கடைசி கூட்டம்
சென்னை: ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கடைசி கருத்து கேட்புக் கூட்டம் செப்டம்பர் 12 அன்று தலைமைச் செய லகத்தில் நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் உத்தர வின்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தி வரும் நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பென்சன் திட்டங்களில் எது சிறந்தது என முடிவு செய்ய ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பல்வேறு கட்டங் களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டு வருகிறது. ஐந்தாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு செப்.30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப் பட்டுள்ளதுடன், கூடுதலாக இரண்டு மாத அவகாசம் பெற வும் குழு முடிவு செய்துள்ளது.
வாக்காளர் பட்டியல்: மனு தள்ளுபடி
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெங்கட சிவக்குமார் தாக்கல் செய்த மனுவில், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி யின் போலி வாக்காளர் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல், மிரட்டல் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. வாக்காளர் பட்டியல் தரவுகளை பி.டி.எஃப். வடி வில் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று கோரப் பட்டது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் “உச்ச நீதிமன்றத்தில் ஒத்த வழக்கு நிலுவையில் உள்ளது” எனக் கூறி, ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
டிஎஸ்பி கைது உத்தரவு ரத்து
சென்னை: அடிதடி வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்றம் செவ்வாயன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டி.எஸ்.பி. சங்கர் கணேஷை விடுதலை செய்யவும் மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கு தடை விதித் தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
86% அணைகள் நிரம்பின
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே, தமிழ்நாட்டின் 86 சதவீத நீர்நிலைகள் முழு கொள்ள ளவு எட்டியுள்ளன. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களி டம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்த நல்ல மழை மற்றும் கர்நாடகத்தில் இருந்து வந்த நீர் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 7ஆவது முறையாக நிரம்பியது. முக்கிய அணை களில் மேட்டூர் 100%, அமராவதி 96.1%, கிருஷ்ணகிரி 97.5%, சோலையாறு 97.7%, பரம்பிக்குளம் 99.6%, ஆழியாறு 98.6%, வைகை 89.8%, பவானிசாகர் 80.8% என நீர் நிலை உள்ளது.
செப்.13-இல் இளையராஜாவுக்கு தமிழக அரசு பாராட்டு விழா!
சென்னை: இசை ஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப் பிக்கும் விதமாக செப்டம் பர் 13 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழா செப்.13 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற வுள்ளது. இந்த விழா வில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹா சன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்கின் றனர். மேலும், வெளி நாட்டு இசைக் கலைஞர் களின் இசைக் கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
விசாரணை நிறுத்தி வைப்பு
சென்னை: தூய்மைப் பணியாளர் போராட்டம் விவகாரத்தில் ஒரு நபர் ஆணையத்தின் விசா ரணை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதர வளித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட போது நடந்த அத்துமீறலை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் பெரியமேடு காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக் கறிஞர்கள் கைது செய் யப்பட்டதை எதிர்த்த ஆட் கொணர்வு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
செப்.13 முதல் விஜய் சுற்றுப்பயணம்
சென்னை: தவெக தலைவர் விஜய் செப்.13 ஆம் தேதி முதல் டிச.20 ஆம் தேதி வரை வார இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பய ணம் மேற்கொள்ள இருக் கிறார். விஜய்யின் தமி ழகம் தழுவிய சுற்றுப்பய ணத்துக்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் விஜய்யின் சுற்றுப் பயண விவரம் வெளி யாகியுள்ளது. விஜய் வார இறுதிகளில் மக்களைச் சந்தித்து பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளார்.