சென்னை, மார்ச் 20 - அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு வழங்குவதே லட்சியமாக கொண்டு அரசு செயல்படு வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை ஞாயில் றன்று (மார்ச் 20) செங்க பட்டு மாவட்டம், வண்ட லூரில் முதலமைச்சர் மு.க.தொடங்கி வைத்தார். இந்த முகாமில் செங்கல் பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பெரு மளவில் கலந்து கொண்ட னர். 500க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவ னங்கள், தங்களுக்கு தேவை யான 73,950 பேரை தேர்வு செய்ய உள்ளன. முகாமில் தேர்வு செய்யப்பட்ட முதல் 20 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், கல்வித் தொலை க்காட்சி வாயிலாக, அரசுப் பணி போட்டித் தேர்வுக ளுக்கு தேவையான பயிற்சி அளிப்பதற்கான ஒளிபரப் பினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பு தினசரி காலை 7 - 9 மணி வரை ஒளி பரப்பப்படும். அதன் மறு ஒளி பரப்பு இரவு 7 - 9 மணிக்கு ஒளிபரப்படும். இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர், அனைவருக் கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே அரசின் லட்சியம். கையில் பட்டத்தத்துடனும் எதிர் காலம் குறித்த ஏக்கத்த துடனும் இருப்பவர்களின் ஏக்கங்கள் தீர்க்கும் வகையில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, அதற்கான தகுதியான நபர்களை உருவாக்குவது என அரசு செயல்பட்டு வரு கிறது” என்றார். தமிழகத்தில் மே 2021 முதல் இதுவரை 36 பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்க ளும், 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்க ளும் நடத்தப்பட்டுள்ளன.
இதில் 5 ஆயிரத்து 708 நிறுவனங்களும், 2 லட்சத்து 50 ஆயிரத்து 516 வேலை நாடுநர்களும் பங்கேற்ளனர். இவர்களில் 41 ஆயிரத்து 213 பேர் பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ள னர். இதில் 517 பேர் மாற்றுதிறனாளிகளாவர். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஜி. செல்வம் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, எஸ்.அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, இ.கருணாநிதி, எழிலரசன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.