tamilnadu

நியமிக்கலாம் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்கலாம் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

சென்னை, செப்.16- வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை நியமிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.  இந்நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், “இனி ஆசிரியர்கள் மட்டும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அல்ல. நகர்ப்புற வாழ்வாதார  திட்டப் பணியாளர்களையும் வாக்குச்சாவடி நிலை அலு வலர்களாக நியமிக்கலாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய, மாநில அரசுகளின் நிரந்தரப் பணியாளர்கள் தேர்தல்  பணிக்கு வர முடியாத சூழலில், மேற்கண்டவர்களை நியமிக்க அனுமதி அளித்துள்ளனர். தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு  தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.