tamilnadu

சென்னை கால்நடை மருத்துவக்  கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

சென்னை கால்நடை மருத்துவக்  கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திரு நெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப் பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை  மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரியில்  முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நடத்தப் பட்ட விசாரணையில் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சவுந்தரராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் முறைகேடுகள் குறித்து விசாரித்து 15 நாட்களுக் குள் அறிக்கை சமர்பிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து முறை கேட்டில் சிக்கிய 5 அலுவலர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப் பட்ட சவுந்தரராஜனுக்கு பதிலாக புதிய முதல்வராக சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலையிடம் பதக்கம்  வாங்க மறுத்த அமைச்சர் மகன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆவாரங்குடி பட்டியில், தமிழ்நாடு துப்பாக்கிச் சங்கம் மற்றும் புதுக் கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து, மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியை நடத்தி வரு கின்றன.  கடந்த ஆக.22 இல் தொடங்கிய போட்டிகள், ஆக.28 வரை நடக்கின்றன. திங்களன்று நடந்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அழைக்கப்பட்டிருந்தார். போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து, பாராட்டினார். துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்ற, அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரியராஜ பாலுவும், அண்ணா மலை கையால் பதக்கம் வாங்க மேடைக்கு வந்தார். அப்போது அண்ணாமலை பதக்கத்தை, சூரியராஜபாலு கழுத்தில் அணிவிக்க முயன்றார். அப்போது, அண்ணா மலை கையை தடுத்த சூரியராஜபாலு, ‘கையில் வேண்டு மானால் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன்; என் கழுத்தில்  பதக்கத்தை நீங்கள் அணிவிக்க வேண்டாம்’ என்றுகூறி, பதக்கத்தை கையில் வாங்கிக் கொண்டார். இதை கொஞ்ச மும் எதிர்பார்க்காத அண்ணாமலை அப்செட் ஆனார்.  சமீபத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ரவி கையால் பட்டம் வாங்க,  நாகர்கோவில் திமுக நிர்வாகியின் மனைவி மறுத்த சம்பவம்  அரங்கேறியது.

கவின் சாதி ஆணவக்கொலை வழக்கில்  கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு

திருநெல்வேலி: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவக்கொலை வழக்கில், சுர்ஜித்  மற்றும் அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெய பால் ஆகியோர் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் செவ்வா யன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் செல்வ  கணேஷ்(27). கடந்த ஜுலை 27ஆம்தேதி பாளையங்கோட்டை  கே.டி.சி நகரில் வைத்து காதல் விவகாரத்தில் ஆணவப் படு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் சுர்ஜித்  மற்றும் அவரது தந்தையான காவல் சார்பு ஆய்வாளர் சர வணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளை. மத்திய சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசார ணைக்கு மாற்றப்பட்டது.  இந்நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர்  “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பாளை. மத்திய சிறையில் இருந்தவாறே, நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஹேமா,   மூவரின் நீதிமன்ற காவலையும் மேலும் 15 நாட்கள் நீட்டித்து  உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கந்த சாமி ஆஜரானார்.

5 இடங்கள் தேர்வு

சென்னை: இராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. இராம நாதபுரம் தாலுகாவில் உள்ள பழங்குளம், தேவிப்பட்டினம்,  கும்பரம், கீழக்கரை தாலுகாவில் உள்ள களரி, மாணிக்கனேரி  ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த  இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய, இந்திய விமான நிலையங் களின் ஆணையம் வாயிலாக, விரைவில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளவும், இந்தப் பணிகளை இந்தாண்டு  இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை: இராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. இராம நாதபுரம் தாலுகாவில் உள்ள பழங்குளம், தேவிப்பட்டினம்,  கும்பரம், கீழக்கரை தாலுகாவில் உள்ள களரி, மாணிக்கனேரி  ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த  இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய, இந்திய விமான நிலையங் களின் ஆணையம் வாயிலாக, விரைவில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளவும், இந்தப் பணிகளை இந்தாண்டு  இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் யார்?

சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பா ளர் எடப்பாடி பழனி சாமி என அமித் ஷா  அறிவித்த பின், அதன் படி நடப்பது பாஜக தொண்டர்களின் கடமை.  எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் கட்சியின் கருத்தே எனது கருத்து” என பாஜக  முன்னாள் மாநிலத்  தலைவர் அண்ணா மலை குண்டை வீசி யிருக்கிறார்.

உயர்மட்ட சாலை

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மை யூரி லிருந்து உத்தண்டி வரை  14.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு  வழித்தட உயர்மட்டச்  சாலை அமைக்கப்பட வுள்ளது. இதன் கட்டு மானப் பணிகளை ரூ.2,100 கோடியில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.

மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி தமிழ்நாடு முதலிடம்!

சென்னை: ஐபோன் கள் ஏற்றுமதியால் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் இந்தியா விலேயே, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள் ளது. ஐபோன்கள் ஏற்று மதியால் மட்டுமே தமிழ் நாட்டின் மின்னணு சாத னங்களின் ஏற்றுமதி மதிப்பு 783% அதிகரித் துள்ளது. 2020-21-இல் ரூ.14,565 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்று மதி மதிப்பு, 2024-25-இல் ரூ.1,28,536 கோடியாக உயர்ந்துள்ளது.