tamilnadu

மார்ச் 18 முதல் சென்னை - திருப்பதி ரயில் சேவை

சென்னை, மார்ச் 15- சென்னை- திருப்பதி விரைவு ரயில்கள் சேவை வரும் 18 ஆம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே தினமும் 2 விரைவு ரயில் சேவை கள் (வண்டி எண்.16057/58, 16053/54) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் 2 ஆம் வகுப்பு இருக்கை வசதி  கொண்ட 5 பொதுப் பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட 2 விரைவு  ரயில்கள் வரும் 17 ஆம் தேதி முதல் இயக்கப் படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, வரும் 18 ஆம் தேதி  முதல் ரயில் சேவைதொடங்கும் என்று தெற்கு ரயில்வே தற்போது தெரிவித்து உள்ளது. சென்னை - திருப்பதி இரு மார்க்கத் திலும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.