tamilnadu

அனில் அம்பானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அனில் அம்பானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இதுதொடர்பான விசாரணையில் அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்துள்ளதாக 2 வழக்கு களை சிபிஐ பதிவு செய்தது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையே அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றன. இத்தகைய சூழலில் கடன் முறைகேடு வழக்கில் அனில் அம் பானி மற்றும் யெஸ் வங்கியின் முன் னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்தி ரிக்கையை தாக்கல் செய்தது.