tamilnadu

கூலி திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்று விவகாரம் நீதிமன்றத்தில்  தணிக்கை வாரியம் விளக்கம்

கூலி திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்று விவகாரம் நீதிமன்றத்தில்  தணிக்கை வாரியம் விளக்கம்

சென்னை: அதிகப்படியான சண்டைக் காட்சிகள், மது  அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் மோசமான வார்த்தை கள் இடம்பெற்றிருந்ததால் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’  திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதாக மத்திய திரைப்பட  தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி காந்தின் 171 ஆவது படமாக உருவான ‘கூலி’ திரைப்படத் திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதால், ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், குடும்பத்தில் ஒருவர் படத்தை பார்க்காமல் குழந்தைகளுடன் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை  உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசார ணைக்கு வந்த வழக்கில், சென்சார் போர்டு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரு தனிக்குழுக்கள் திரைப்படத்தை பார்த்து பரிந்துரைத்தபடியே ‘ஏ’ சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. கூலி திரைப்படத்தில் அதிகப்படியான சண்டைக் காட்சிகள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற  காட்சிகள் மற்றும் மோசமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்த தாக தணிக்கை வாரியம் தெரிவித்தது. இவற்றை நீக்கி னால் U/A சான்றிதழ் தருவதாக இருமுறை படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் படத்தயாரிப்பு நிறுவனம் காட்சிகளை நீக்க முன்வரவில்லை. பல அம்சங்களை ஆய்வு செய்தே சண்டை காட்சிகள்  நிறைந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், அந்த வகையில் ‘கூலி’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க முடியாது என்றும் தணிக்கை வாரியம் நீதி மன்றத்தில் தெரிவித்தது.