tamilnadu

img

‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ கொண்டாட்டம்

‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ கொண்டாட்டம்

சென்னை, செப். 25 - தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனை கள் குறித்து விளக்கும் வகையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்னும் நிகழ்ச்சி சென்னை  நேரு விளையாட்டு உள்ளரங்கில் வியாழ னன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி னார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர் கள், கல்வியாளர்கள் திரைக்கலைஞர்கள் சிவ குமார், சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் பிரேம் குமார், ஞானவேல், கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா வின் தொடக்கத்தில் தமிழக அரசு கல்விக்காக செய்த சாதனைகள் குறித்து வீடியோ ஒளி பரப்பு செய்யப்பட்டது.