tamilnadu

கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு ஆக.15-க்குள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு ஆக.15-க்குள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

திருநெல்வேலி, ஆக. 5- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வ கணேஷ் ( 27). இவர் சென்னையில் ஐ.டி. ஊழி யராக பணியாற்றி வந்தார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை  கே.டி.சி.நகர் பகுதியில் கடந்த 27- ஆம் தேதி  காதல் விவகாரத்தில்  ஐ.டி. ஊழியரான பட்டி யலின வாலிபர் கவின், சுர்ஜித் என்பவரால்  சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.  சுர்ஜித்தின் பெற்றோர் காவல் உதவி ஆய்வா ளர்களாக பணியாற்றியவர்கள். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த வழக்கு தொடர்பாக தேசிய ஆதி திராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மஹ்வானா மற்றும் குழு அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். இந்நிலையில் கவின் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.  போலீசார்  புதன்கிழமை அன்று கவின் வீட்டில்  விசாரணை நடத்துகின்றனர். கொலை சம்ப வம் தொடர்பாக புகார் அளித்த கவின்  தாயார் மற்றும் சம்பவத்தன்று நெல்லையில்  இருந்த கவின் சகோதரர், அவரது தாய்மாமா மற்றும் கவின் தந்தை ஆகியோரி டம் நேரில் விசாரணை நடத்துகின்றனர். இது  தொடர்பாக காவல்துறை ஆவணங்கள் சரி பார்க்கும் பணி முடிந்த நிலையில் புகார்தார ரிடம் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து விசாரணை அடிப்படையில் குற்றம்  சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர். அந்த வகையில் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வருகிற 15 ஆம் தேதிக்குள் சிபிசிஐடி அலு வலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தர விடப்பட்டுள்ளது.