tamilnadu

img

‘சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது’

இந்தியாவில் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை அளிக் கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த கணக்கெடுப்பில், சாதி,  சமூக பொருளாதார அடிப்படைகளையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 2021இல் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஒன்றிய அரசு, 2021  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தா லும், அதில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. 1881 முதல் 1941 வரை பத்தாண்டு க்கு ஒருமுறை மக்கள்தொகை கணக் கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு சுதந்திர இந்தியாவில் சாதிவாரி கணக் கெடுப்பு நிறுத்தப்பட்டு விட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப் பட்டது. 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, 118 கோடி மக்களிடம் இருந்து தக வல்கள் திரட்டப்பட்டன. 2014ல் ஆட்சிக்கு  வந்த பாஜக, சாதி மற்றும் பொருளாதார அடிப்படையிலான விவரங்களை வெளி யிட மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சி யாக, தற்போது சாதிவாரி கணக் கெடுப்பை நடத்த மறுக்கிறது. 1931ம் ஆண்டு சாதிவாரி மக்கள்  தொகை கணக்கெடுப்பில், பிற்படுத்தப் பட்ட மக்கள் 52 விழுக்காடாக இருந்தனர். அதனை  அடிப்படையாகக் கொண்டு மண்டல் கமிஷன் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது. மண்டல் கமிஷன் காலத்தில் கணக்கிட்டிருந்தால் பிற்படுத்தப் பட்டோர் எண்ணிக்கை 80 விழுக்காடு வரை இருந்திருக்கும். அப்படியானால், 40 விழுக்காடு வரை இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.

ஆனால், மக்கள்தொகையில் 85-90 விழுக்காடு இருப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சற்றேறக் குறைய இதே அளவில் பிற்படுத்தப் பட்ட மக்கள் இருப்பார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், பிற்படுத்தப் பட்டோரின் உண்மையான எண்ணிக்கை தெரிந்துவிடும். மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கேட்டு மக்கள் போராடு வார்கள். எனவே, பிற்படுத்தப்பட்டோ ருக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது; கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறிவிடக் கூடாது என்பதற்காகவே பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. இதுஒருபுறம் இருக்க, சட்டப்படி வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டையும் கூட ஒன்றியஅரசு செயல்படுத்த மறுக்கிறது.  ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங் களில், வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடும், எஸ்சி/எஸ்டி மக்களுக்கு 23 விழுக்காடும் ஒது க்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், சாதி உணர்வு மேலோங்கிவிடும் என்று திசை திருப்புகிறார்கள்.