சமத்துவத்துக்கு வேட்டு வைக்கும் சாதி அமைப்புகள்
நெல்லை பொதுக்கூட்டத்தில் பி.சம்பத் பேச்சு திருநெல்வேலி, செப். 11- சமத்துவத்துக்கு வேட்டுவைக்கும் சாதிய அமைப்புகளை அம்பலப்படுத்தி பேசிய சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், கேரளம், மேற்குவங்கத்தில் அத்த கைய ஒடுக்குமுறைகள் மிக குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஆணவப்படு கொலைகளை தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி திருநெல்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: சாதி ஆணவ படுகொலைகள் குறித்து தனது நிலைப்பாடு என்ன என்பதை டாக்டர் கிருஷ்ணசாமி தெளிவுபடுத்த வேண்டும். சாதிக்குள்ளேயே திருமணம் செய்தால் போதும் என்கிறார். இதுதான் அவ ரது நிலைப்பாடா? அவர் சேர்ந்த இடம் சரி யில்லை. சாதிய வர்ணாசிரமத்தை வலி யுறுத்தும் ஆர்எஸ்எஸ் உடன் கைகோர்த்தால் அப்படித்தான் பேசுவார். சமத்துவத்திற்கு சாதி அமைப்புகள் வேட்டு வைக்கின்றன. தலித் மக்களிடம் எழுச்சி இருக்கிறது, ஆனால் அவர்களை சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக நிறுத்த சாதிய அமைப்புகளால் முடியவில்லை. வன்முறை களில் இருந்து ஏன் இந்த தலித் மக்களால் விடுபட முடியவில்லை. தலித் மக்களில் 88 சதவீதம் பேர் நிலமற்றவர்கள். அடுத்தவேளை உணவுக்கு ஆதிக்க சாதியினரை நம்பி இருக்கும் மக்கள், எப்படி ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிற்பார்கள்? வாழ்நிலைதான் உணர்வை தீர்மானிக்கிறது என்று 200 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் குறிப்பிட்டார். ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தலித் மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த நிலமும், வீடும் வழங்கிட வேண்டும். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு அதை செய்திருக்கிறது. ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில், திரிபுராவில் அதைச் செய்தது. தமிழ்நாடு உட்பட இதர மாநிலங்களில் முழு அளவில் நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை. பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைகள் உ.பி.யில் 32 ஆயிரம், பீகாரில் 28 ஆயிரம், மத்தியப் பிரதேசத்தில் 22 ஆயிரம், இந்த மாநிலங்களுக்கு சளைக்காமல் தமிழ்நாட்டில் 26 ஆயிரம் வன்கொடுமைகள் நடந்துள்ளன. ஆனால், கேரளம், மேற்குவங்கத்தில் மிக சொற்பமாக சில நூறு வன்முறைகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் அந்த மக்களை கம்யூனிஸ்ட்டுகள் பாதுகாக்கிறார்கள். அதனால்தான் அங்கெல்லாம் சாதிய அமைப்புகள் கோலோச்ச முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார். தொகுபபு : சி.முருகேசன்