tamilnadu

பல்கலைக்கழக சட்டங்கள் தொடர்பான வழக்கு ஒன்றிய அரசு, தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பல்கலைக்கழக சட்டங்கள் தொடர்பான வழக்கு ஒன்றிய அரசு, தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுதில்லி, ஜூலை 5 - தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே 21 அன்று இடைக்காலத் தடை விதித்திருந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தொடுத்த  வழக்கில், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தி ருந்தது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏப்ரல்  8 அன்று ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில்,  ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின்  மசோதாக்களை நீண்ட காலம் கிடப்  பில் போட்டதை கடுமையாக விமர்சித் ததுடன், இம்மசோதாக்களுக்கு நீதி மன்றமே “கருதப்பட்ட அனுமதி” (deemed assent) வழங்குவதாக அதிரடியாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பல்க லைக்கழகங்களுக்கு துணைவேந் தர்களை நியமிக்கும் மசோதா உள்ளிட்ட தமிழக அரசின் மசோதாக் கள் சட்டமாகின. ஆனால், உச்ச நீதிமன்றமே தீர்ப்ப ளித்த பின்னரும் உயர் நீதிமன்றம் மே 21 அன்று இந்த சட்டங்களின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியது. இதனை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகா தேவன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், வெள்ளிக்கிழமை விசார ணைக்கு வந்தது.  அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எம். சிங்வி, ராகேஷ் திவேதி மற்றும் பி. வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.  அவர்கள், “இந்த வழக்கு மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி முறை பற்றிய  முக்கியமான சட்டப்பூர்வ கேள்வி களை எழுப்புகிறது என்றும், மாநில  பல்கலைக்கழகங்களை நிறுவுதல், நிர்வகித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவை மாநில அரசின் அதிகா ரப்பரப்பில் வருவதாக வாதங்களை முன்வைத்தனர். “நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை சவால் செய்யும் விவகாரங்களில் தற்காலிக உத்தரவுகள் வழங்குவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப இயற்றப்படும் சட்டங்களுக்கு வலு வான சட்டத்தன்மை உண்டு” என்றும் எடுத்துரைத்தனர். பல்கலைக்கழக மானியக் குழு வின் (UGC) சார்பில் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா ஆஜராகி, தமிழக அரசின் சட்டங்கள் 2018-ன் UGC விதி முறைகளுக்கு முற்றிலும் முரணா னவை என்று வாதிட்டார். நிறைவாக, தமிழக அரசின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, 4 வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, ஆளு நர் மாளிகை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.