tamilnadu

குட்லாடம்பட்டி அருவியை சீரமைப்பது குறித்த வழக்கு... மதுரை ஆட்சியர், வனத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை:
மதுரை  குட்லாடம்பட்டி அருவியைசீரமைக்கக் கோரிய வழக்கில் மதுரைஆட்சியர், மதுரை மாவட்ட வனத்துறைஅதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த சக்கரை முஹமது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பகுதியில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி அருவி இங்கு அப்பகுதி மக்கள் மட்டும்செல்லக் கூடிய இடமாக இருந்தது.இந்த நிலையில் 2016-ஆம் ஆண்டுரூ.35 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை மற்றும் பெண்கள் குளிப்பதற்காக அருவியின் அருகே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. அதிலிருந்து குட்லாடம்பட்டி அருவிக்கு குளிப்பதற்காக பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் வரத் தொடங்கினர்.

குட்லாடம்பட்டி அருவியில் மழைக் காலங்களில் மட்டும் தண்ணீர்வரும் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் 2018 -ஆம்  ஆண்டு கஜா புயலின் காரணமாக குட்லாடம்பட்டி அருவி பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இதனால் மக்கள் குளிக்க தடைவிதித்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக குட்லாடம்பட்டி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.தற்போது கொரோனா ஊரடங்கில்சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள் ளது. இதனால் மீண்டும் குட்லாடம்பட்டி அருவிக்குச் சென்று பார்த்தபோது இரண்டு வருடங்களுக்கு முன்புசேதமடைந்த இடம் தற்போது வரை சரி செய்யப்படாமல் உள்ளது.இது குறித்து அதிகாரிகள் பலருக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.  சேதமடைந்த அருவிப் பகுதியை உடனடியாக சரி செய்ய உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு திங்களன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் ராஜமாணிக் கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு தொடர்பாக மதுரைமாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சிபிஎம் போராட்டம்
குட்லாடம்பட்டி அருவி சீரமைப்பது தொடர்பாக வழக்கு இருந்தாலும்அருவியை சீரமைக்க வேண்டும். அனைவரையும் அங்கு குளிக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்தவாரம் வாடிப்பட்டியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி ஒன்றியச்செயலாளர் ஏ.வேல்பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

;