உதவியாளர் நேரடி நியமனத்தை ரத்து செய்க! பொதுப் பணித்துறை கணக்கு, ஆட்சிப் பணியாளர்கள் போராட்டம்
சென்னை, ஜூலை 29 - உதவியாளர் நேரடி நியமனத்தை கைவிட கோரி செவ்வாயன்று (ஜூலை 29) சென்னை எழிலகத்தில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். பொதுப் பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 2017ஆம் ஆண்டு முதல் 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்கள் நேரடியாகவும், 50 விழுக்காடு தேர்வாணையம் மூலமும் நியமனம் செய்யப்படுகிறது. இதை ரத்து செய்து, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். அரசாணை 69-ஐ ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள விதிப்படி, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பதவி மாற்றம் மூலம் இளநிலை வரை தொழில் அலு வலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையை போன்று கோட்டக் கணக்கர் பதவியை மாநில சேவையாக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகள் அதிகள வில் உள்ளதால், மண்டல அலுவல கங்களில் சட்ட அலுவலர்கள் நிய மிக்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை கணக்கு மற்றும் நீர்வளத்துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் இந்த பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ. செல்வம் பேசுகையில், “450-க்கும் அதிகமான உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 700-க்கும் மேற் பட்ட இளநிலை தட்டச்சர்களுக்கு பதவிஉயர்வு வழங்கி, இந்த இடங்களை நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி அடுத்த கட்டமாக தீவிர போராட்டம் நடத்தப்படும்” என்றார். போராட்டத்திற்கு சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலா ளர் இரா.பாண்டுரங்கன் வரவேற் றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சா.டானியல் ஜெயசிங் துவக்கவு ரையாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோ.கோமதி நாயகம் கோரிக்கையை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.விஜயகுமரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கத் தின் பொதுச் செயலாளர் ஆ.ரெங்கசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் ம.அந்தோணி சாமி (வடசென்னை), த.முத்துக்குமார சாமி வேல் (தென்சென்னை), ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் நிறை வுரையாற்றினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் இராம.வெங்கடாஜலபதி நன்றி கூறினார். இந்த போராட்டத்தை அடுத்து சங்கத் தலைவர்களுடன் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.