பட்டுக்கோட்டை சிபிஎம் அலுவலகத்துக்கு தொழிலதிபர் நன்கொடை
தஞ்சாவூர், அக். 23- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான இரணியன் நினைவகம், கட்டுமானப் பணிகள் சிறிது சிறிதாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு தரப்பினரும் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அலுவலக மாடியில் தனியாக செட், மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அபுதாபி தொழிலதிபர் ஆர்.தனபால், முதற்கட்டமாக முன்தொகை வழங்கியுள்ள அவர், செட், மேற்கூரை அமைப்பதற்கான முழு செலவையும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளார். இதற்கான நிதியை, புதன்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியனிடம் வழங்கினார். அப்போது சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி, மூத்த தோழர் மெரினா பூ. ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர் பெஞ்சமின், மோரீஸ் அண்ணாதுரை, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
