ஆ.பாலசுப்பிரமணியன் மாவட்டச்செயலாளர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மதுரை மாநகர்
தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் (DSMM) அகில இந்திய 3ஆவது மாநாடு பீகார் மாநிலம் பெகுசராய் மாநகரில் டிச - 4, 5 தேதிகளில் நடைபெற்றது. பெகுசராய் பயணம் இரண்டு முழுப் பகலையும், ஒன்றரை இரவு நேரத்தையும் கொண்ட நெடிய பயணமாய் அது இருந்தது. ரயில் தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநி லங்களைக் கடந்து கொண்டு பீகார் சென்றடைந்தது. பீகாரின் பழமையான பெயர் ‘மகதம்’ ஆகும். மகதப் பேரசை ஆண்டவர்கள் மௌரியர்கள். இந்த பூமி தான் ஒடுக்கப் பட்ட மக்களின் பக்கம் நின்று பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிராக கலகக் குரல் உயர்த்திய சமணத்தையும், பௌத்தத்தை யும் தோற்றுவித்தது. பீகாரில் தொழில் வளர்ச்சியடைந்த மாநகரான ‘பெகுசராய்’ ஒரு மாவட்டத் தலைநகரமாகும். பெகுசராய் என்றால் பேகம் - ராணி; சராய் - சத்திரம் என்று பொருள். பேகல்பூர் ராணி இங்கு வருகை தந்து நீண்ட நாட்களாக தங்கியிருந்து சென்றதன் நினைவாக பெயர் சூட்டப்பட்டு பின்னர், வழக்கில் ‘பெகுசராயாக’ மாறி யுள்ளது; கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இம்மாநகரம்... கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பலமான தளமாக எப்போதுமே இருந்து வருவதால் ‘பீகாரின் லெனின் கிராடு’ என்கிற பெயரையும் தாங்கி யுள்ளது! பெகுசராயின் ரயில் சந்திப்பில் முதலில் வரவேற்றது கடும் குளிர். எங்களோடு ஆந்திர மாநிலத் தோழர்களும் வருகை தந்தி ருந்தனர். எங்களை வரவேற்ற பெகுசராய் மாநகரத் தோழர்கள் தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்ல பழைய அம்பாசிடர் கார்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
‘இன்ன மும் நான் இருக்கிறேன்” என்பதை சொல் லாமல் சொல்லிய அந்த கார்கள் எங்களைப் பார்த்து பரிதாபமாக ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்தன. பெகுசராய் தொழில் வளர்ச்சியடைந்த மாநகராக அறியப்பட்டாலும் புழுதி பறக்கும் சாலைகள், சாலையோரம் மண்டிக் கிடக்கும் குப்பைக் கூளங்கள், அலங்கார மற்ற கடைத் தெருக்கள். இவையனைத் தும் அந்த மாநகரம் நவீன வளர்ச்சியை அழையா விருந்தாளியை விருப்பமின்றி வீட்டில் ஏற்றுக் கொண்டது போல் இருந்தது. பெகுசராய் பேருந்து நிலையமும், ரயில் சந்திப்பும் எதிரெதிரே அமைந்து இருந்த தால் அந்த இடம் எப்போதும் போக்கு வரத்து நெருக்கடியுடனும், பரபரப்பாகவும் காணப்பட்டது. பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகள் மட்டு மின்றி ஏராளமான தனியார் வேன்களும் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் பெரும் பாலான வாகனங்கள் ‘கிழிந்து போன கந்த லாடையை சுற்றிக் கொண்டு நான் இப்ப டித்தான் இருப்பேன்! நீ என்ன செய்வ?’ என்று வம்பிழுக்கும் சண்டியரைப் போல்’ காட்சி தந்தன. வாகனங்களின் இந்த நிலை மையைப் பார்க்கும் போது அந்த மாநி லத்தின் மோசமான பொதுப் போக்குவரத் தின் எதிர்மறை விளைவாக இருக்கலாம் எனத் தோன்றியது. அங்கிருந்து சுமார் 4 மணி நேர பயணத் தில் பாட்னா அமைந்துள்ளது. அதன் நுழை வாயிலில் மகா கங்கை சுமார் இரண்டே முக்கால் கிலோ மீட்டர் அகலத்திற்கு நீர் பரப்பி கம்பீரமாகவும்; அந்த கம்பீரத்தின் செருக்கை கொஞ்சமும் வெளிக்காட்டாமல் எவ்விதச் சலனமும் இன்றி தன்னடக்கத்துட னும் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் கவி காளிதாசன் பாணியில் ‘ஓ கங்கையே! உன்னைப் போல் எங்களுக்கும் தன்னடக்கத்துடன் வாழக் கற்றுத் தரு வாயா?’ எனப் பாட வேண்டும் போல் இருந்தது. கங்கையைக் கடந்த போது, இந்த மகா நதியின் கரையில்.... தாயின் மடியில் தவழும் ஒரு குழந்தையைப் போல் பாட்னா காட்சியளித்தது!
பீகாரின் கலாச்சாரம்
பீகாரில் மைதிலி (பீகாரி) மற்றும் இந்தி ஆகியவை அலுவல் மொழிகளாக உள்ளன. 15 மாவட்டங்களில் உருது அலுவல் மொழி யாக பயன்பாட்டில் உள்ளது. பெரும் பாலான பீகாரிகள் பேச்சு மொழிகளாக போஜ்பூரி மற்றும் இந்தியையே பயன் படுத்துகின்றனர். பீகாரிகள் வெளிர் நிறக் கோதுமை நிறம் கொண்டவர்கள். பீகாரிகளில் பெண்கள் வயது வித்தியாசமின்றி உதட்டுச்சாயம் பூசிக் கொள்கின்றனர். அணிகலன்கள் அணிவதில் நாட்டம் கொண்டவர்களாகவும் உள்ளனர். உதட்டுச்சாயம் அழகுக்காக என்பதைத் தாண்டி நீண்ட பனிப்பொழிவை எதிர்கொள்ளும் பருவநிலையின் தேவை யிலிருந்தே அந்தப் பழக்கம் உருவாகியுள் ளது. ஆண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் விருப்பம் இல்லாதவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் சிறுவர்கள் தவிர இளைஞர்களும், முதியோர்களும் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்தும் வழக்கத் தைக் கொண்டுள்ளனர். குட்கா போன்ற போதை வஸ்துக்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்தா லும் அங்கே சிகரெட்டுகள் கடைகளில் எளிதாகக் கிடைப்பதில்லை. பீகாரிகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு முக்கிய மான விசயம் அவர்களது உணவுப் பழக்க வழக்கமாகும். உருளைக்கிழங்கு, காலி பிளவர், தக்காளி, பூண்டு, வெங்காயம் இவற்றோடு பச்சை மிளகாய் அவர்களது உணவில் தவறாமல் இடம் பெறுகின்றது.
அவர்களது எல்லா உணவு வகையிலும் புளிக்காடிச் சுவையும் தவறாமல் இடம் பெறுகிறது. அறுசுவைகளில் புளிப்பையும், காரத்தையும் எடுத்துக் கொண்டால் அவற்றை ‘ராஜ சுவை’ என்று தான் சொல்ல வேண்டும். அவர்களது உணவில் காரத் தன்மை சற்று தூக்கலாகவே உள்ளது. இந்தக் கார உணவுக்குப் பின் இனிப்புக் காக ரசகுல்லாவையும், குலோப் ஜாமூனை யும் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது அதன் சுவையே அலாதி தான். பீகாரிகளின் கலை ரசனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகும். வழி நெடுகி லும் பல கிராமங்களிலும், சிறிய நகரங்க ளின் பொது இடங்களிலும், கோவில்களிலும், பல வாகனங்களிலும் மைதிலி (பீகாரி) மற்றும் போஜ்பூரி பாடல்கள் ஒலித்த வண்ணமாய் இருந்தன. அதிலும், குறிப்பாக ஏராளமான திருமண வைபவங்களுக்கு என்றே அலங்கரிக்கப்பட்ட வேன் போன்ற வாகனத்தில் மணமக்களை அமர வைத்து மேற்கத்திய இசையில் அமைந்த உள்ளூர் மெல்லிசை பாடல்கள் ஒலித்த வண்ண மாய் இருந்தன. அந்தப் பாடலின் தாளத்திற் கேற்றவாறு பெரும்பாலும் பாரம்பரிய உடையணிந்த பெண்கள், புடை சூழ, இளம்பெண்கள் நடனம் ஆடியவாறு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தகயாவும்.... நாளந்தாவும்.....
பாட்னாவில் இருந்து புத்தகயாவிற்கு வாகனம் பயணித்தது. நான்கு வழிச்சாலை வழியாக பயணித்த போதும் பல இடங்க ளில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக இருந்தன. நான்கு வழிச்சாலை பணிகளின் காரணமாக பல கிராமங்கள் சிதிலமடைந்தது போல் காட்சியளித்தன! இந்தியாவின் தற்போதைய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கு மிகவும் மூர்க்கத்தன மாக முன்னேறுகிறது! சிறு நிலவுடமை ஆதிக்கம் நிறைந்த பீகாரின் கிராமங் களை ஏற்கனவே, நிலப் பிரபுத்துவம் கடுமையாக நசுக்கியுள்ளது. இப்போது முதலாளித்துவமும் சேர்ந்து கொண்டது; சரியாகச் சொல்வதென்றால் பீகார் மட்டுமல்ல இன்றைய இந்தி யாவின் கிராமங்களை அரை நிலப்பிரபுத்துவமும், பெருமுதலாளித்துவமும் கூட்டுக்கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை! இவ்வாறாகச் சிதில மடைந்த சாலைகளின் வழியே 3 மணி நேரத்தில் சென்று சேர வேண்டிய புத்தகயாவிற்கு 7 மணி நேரம் பயணிக்க நேர்ந்தது. ஆயினும் அது ஓர் அற்புதமான தருணம்! புத்தர் அமர்ந்து ஞானம் பெற்ற தாகக் கருதப்படும் போதி மரத்தின் (அரச மரம்) நான்காம் தலைமுறை மரம் அங்குள்ளது. அதனை கண்ணும் கருத்துமாக பாது காத்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் பௌத்த துறவி களின் நடமாட்டம், தியா னம் என அந்த இடமே தத்துவ ஞானியின் நினைவிடம் என்கிற எல்லை கடந்து; உருவ வழிபாட்டைக் கொண்ட புண்ணிய (ஆன் மிக)த் தலமாகவே மாற்றப் பட்டு இருந்தது.
இவை யெல்லாம் மகாயானப் பௌத்தப் பிரிவு புத்தரின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்ததினால் ஏற்பட்ட மாற்றமாகும். இந்திய வரலாற்றில் பிரா மணியக் கருத்தியலைத் தாங்கி வந்த தத்துவத் திற்கும் சடங்குகளுக்கும் எதிரான கலகத்தை துவக்கி வைத்தவர் சமணத்தை தோற்றுவித்த மகாவீரர் என்றால் - அதை எளிய மக்களிடம் பரவலாகவும், ஆழமாகவும் கொண்டு சேர்த்தவர் கௌதம புத்தர் ஆவார். அது மட்டுமின்றி வடமொழிகளில் சமஸ் கிருதம் செல்வாக்குப் பெற்றிருந்த அக்காலத்தில், அதே வடமொழிகளில் ஒன்றான மக்களின் பேச்சு வழக்கு மொழியாகவும் திகழ்ந்த ‘பிராகிருதத்தி லேயே’ தன்னுடைய தத்து வங்களை புத்தர் போதனை செய்தார்; சாதாரண மக்களை அணுகுவதற்கும் நெருங்கிச் செல்வதற்கும் மிகச்சிறந்த வழியாக அவர் நடைபயணத்தையே தேர்வு செய்தார்; பண்டைய வரலாற்றில் எளிய மக்களின் முதல் மக்கள் தலைவரும், புரட்சியாளரும் புத்தரே ஆவார்!
நாளந்தா பல்கலைக்கழகம்
சாம்ராட் அசோகரால் அடித்தளமிடப்பட்டு பின்னர் வந்த பௌத்த மன்னர் குமார குப்தரால் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பிரம்மாண் டமான அறிவுக் கருவூலம் நாளந்தா பல்கலைக் கழக மாகும். அடுத்தடுத்த மூன்று தலைமுறை மன்னர்களால் மேலும், இது விரிவுபடுத்தப் பட்டுள்ளது. அன்றைக்கே உலகின் பல்வேறு நாடுகளி லிருந்து சுமார் 10,000 மாண வர்கள் கல்வி பயின்றுள்ள னர். இந்த நாளந்தாவில்தான் புகழ்பெற்ற சீன யாத்ரீகர் யுவான்சுவாங் 16 ஆண்டு கள் தங்கி மாணவராக கல்வி பயின்றும், பின்னர் ஆசிரி யராகவும் பணிபுரிந்துள்ளார். இப்பேர்ப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் பல்வேறு காலங்களில் தாக்கு தலுக்குள்ளாகி உள்ளது. இதை தகர்த்து தரை மட்ட மாக்கியது கில்ஜி என்கிற சுல்தான். இந்த மாபெரும் பல் கலைக்கழகத்தின் பொக்கி ஷங்களான நூல்கள், ஓலைச் சுவடிகள், எழுத்துருக்கள் வடிவிலான பல்வேறு பொருட் களையும் எரித்தவர்கள் சனாதன பிராமணியவாதி கள். இடிபாடுகளுடனும், எரிந்துபோன சுவடுகளுட னும் முந்தைய நாளந்தா வின் பத்தில் ஒரு பங்கு மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது!