நாகர்கோவில், ஜூன் 26- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவை துவங்குவதில் கால தாமதம் செய்யக்கூடாது, பிஎஸ்என்எல் புத்தாக்க திட்டத்தை காலதாமதம் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, பொருளாளர் ஆறுமுகம், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் காளியப்பன், சுயம்புலிங்கம், மணிகண்டன், ஞானமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.