பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று கூடுகிறது
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 5 - பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 6) துவங்குகிறது. இரண்டு நாள் நடைபெறும் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகள், கூட்டணி நாடுகளின் தலைவர்கள் அந்நாட்டில் கூடியுள்ளனர். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோ னேசியா ஆகிய 11 நாடுகள் இக்கூட்ட மைப்பின் உறுப்பினராக உள்ளன. இவை உலக மக்கள்தொகையில் 50 சதவிகிதத்தையும், உலக உற் பத்தி பொருளாதாரத்தில் 40 சதவிகி தத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தப் படுத்துகின்றன. இது மட்டுமின்றி பிரிக்ஸ் கூட்ட மைப்பில் வியட்நாம், கியூபா, பெலா ரஸ், பொலிவியா, கஜகஸ்தான், மலே சியா, நைஜீரியா, தாய்லாந்து, உகா ண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் கூட்டாளி நாடுகளாக உள்ளன. வளரும் தெற்குலக நாடுகளின் மீது, அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்டு டிரம்ப் விதித்துள்ள அதிக வரி கள் மற்றும் அந்த நாடுகளுடன் கடைப்பிடித்து வரும் கடுமையான வர்த்தகக் கொள்கைகள் குறித்தும் அதற்கான மாற்றுத் திட்டத்தை உரு வாக்குவது பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், உலகளவில் நடை பெற்று வருகிற போர்கள் குறித்தும் இந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப் படலாம் என கூறப்படுகிறது.