சென்னை,நவ.1- மார்பக புற்றுநோயால் அதிக ளவில் சென்னை பெண்கள் பாதிக்கப் படும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் வெளியாகி யுள்ளது. சென்னையில் 19 பெண்களில் ஒரு வர் தங்கள் வாழ்நாளில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்கிறது கேன்சர் இன்ஸ்டி ட்யூட் நடத்திய, ‘தமிழ்நாடு புற்று நோய் பதிவுத் திட்டம் 2019’ எனும் ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரம். 0 முதல் 74 வயது வரையிலான பெண் களில் இந்த விகிதம் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் மிக அதிக Crude Incidence Rate (CIR) கொண்ட நகர மாக சென்னை உள்ளது. ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 51.8 பேர் என்ற விகிதத்தில் இந்நோய் காணப்படு கிறது.
தமிழ்நாட்டில் பாதிப்பு
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் மார்பக புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக: - கன்னியாகுமரி (43.0/லட்சம்) - கோயம்புத்தூர் (40.2/லட்சம்) - காஞ்சிபுரம் (37.1/லட்சம்) - ஈரோடு (36.1/லட்சம்) - திருவள்ளூர் (34.2/லட்சம்) ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ளது. காலதாமத சிகிச்சை பிரச்சனை இதுகுறித்து கேன்சர் இன்ஸ்டிட் யூட்டின் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதேவி கூறுகையில், “பெரும் பாலான பெண்கள் மார்பில் கட்டி இருப்பதை கண்டறிந்த 6-8 மாதங் களுக்குப் பிறகே மருத்துவரை அணுகுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். சரியான மருத்துவரை சரியான நேரத்தில் சந்திக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார். குடும்ப வரலாறு - வாழ்க்கை முறை மொத்த நோயாளிகளில் 5-10 சத வீதம் பேர் மட்டுமே குடும்ப வரலாறு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் பேர் வாழ்க்கை முறை மாற்றங்களால் பாதிக்கப்படு கிறார்கள். இதில் முக்கியமானவை: - உணவுப் பழக்க மாற்றங்கள் - தாமதமான குழந்தை பேறு - பல குழந்தைகள் பெறாமை - குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமை
முன்னேற்றம் காணும் சிகிச்சை முறைகள்
30 ஆண்டுகளுக்கு முன்பு 60 சதவீத பெண்கள் மூன்றாம் நிலையில் தான் சிகிச்சைக்கு வந்தனர். ஆனால் இப்போது சுமார் 50 சதவீதம் பேர் ஆரம்ப நிலையிலேயே வருகின்றனர் என்பது ஆறுதல் அளிக்கிறது. அரசின் முயற்சிகள் தமிழக அரசு நவம்பர் 2023-இல் ஈரோடு மாவட்ட மையத்தில் சமுதாய அடிப்படையிலான புற்றுநோய் பரி சோதனை திட்டத்தை தொடங்கி யுள்ளது. இது காஞ்சிபுரம், திருப்பத் தூர் ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது. சிகிச்சை முறைகள் “பாரம்பரியமாக மார்பக அறுவை சிகிச்சையில் முழு மார்பகமும், அக்குள் நிணநீர் முடிச்சுகளும் நீக்கப்படும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மார்பகப் பாதுகாப்பு சிகிச்சை முறைகள் அதிகரித்துள்ளன. அக்குள் பகுதியில் காவல் நிண நீர் முடிச்சு மட்டும் நீக்கப்படுவது ஆரம்ப நிலை புற்றுநோய்களுக்கு பாதுகாப்பானது” என்கிறார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
விழிப்புணர்வு - முன்னெச்சரிக்கை
- தொடர்ந்த விழிப்புணர்வு மிக முக்கியம் - மாதந்தோறும் சுய பரிசோதனை செய்ய வேண்டும். - குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் - மார்பில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவ ரை அணுக வேண்டும். அக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கடைப் பிடிக்கப்படுகிறது. இந்நோய் குறித்த விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டறி தல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது ஆகியவை மிக முக்கியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்து கின்றனர். இறுதியாக, மார்பகப் புற்று நோய் குறித்த அச்சத்தை விட விழிப் புணர்வு முக்கியம். முறையான பரி சோதனை மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் இந்நோயை முழுமையாக குணப் படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று மருத்து வர்கள் அறிவுறுத்துகின்றனர்.
(அக். 31 தி இந்து (ஆங்கிலம்) ஏட்டில் ஷெரீனா ஜோஸ்பைன் எழுதிய செய்திக் கட்டுரையிலிருந்து)