tamilnadu

img

சதுரங்க உலகில் ‘ராஜாவுக்கு ராஜா’!

“விளையும் பயிர் முளை யிலே தெரியும்’’ என்ப தற்கு எடுத்துக்காட்டாக  7 வயதில்  செஸ் விளையாட்டில் அடியெடுத்து வைத்த சிறுவன்,  17வது வயதில் இந்தி யாவின் ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.

இவர் யார்?

2006 ஆம் ஆண்டில் சென்னையில்  பிறந்தவர் குகேஷ் டி என்று அழைக்கப்  படும் தொம்மராஜூ குகேஷ். தந்தை  ரஜினிகாந்த். காது, மூக்கு, தொண்டை  அறுவை சிகிச்சை நிபுணர். தாய் பத்மா  ஒரு நுண்ணுயிரியல் நிபுணர். சென்னை  மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய குகேஷ், சிறுவயதில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஏழு வயதில் சதுரங்க காய்களை பிடித்  தார். மகனுக்காக தனது மருத்துவ பயிற்சியை ஒதுக்கி வைத்தார் தந்தை.

கில்லாடிக்கு கில்லாடி!

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் செஸ் பயிற்சியில் மூழ்கிய குகேஷின் ஆர்வம், திறமைக்கு வேலம்மாள் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் மேலும் ஊக்கம் கொடுத்தனர். வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு விளையாடியதால் பரிசு, கோப்பைகள் குவிந்தன. 9 வயதில் ஆசிய பள்ளி செஸ்  சாம்பியன்ஷிப் பட்டம். 2018 ஆம்  ஆண்டில் உலக இளைஞர் செஸ்  சாம்பியன்ஷிப் பட்டம். அடுத்தடுத்து ஆண்டுகளில் ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப், யு-12 தொடர்  களில்  தனிநபர் ரேபிட், பிளிட்ஸ், கிளா சிக்கல் என்று ஐந்து பிரிவுகளிலும் தங்கப் பதக்கத்தை அள்ளி வந்தார்.

தன்னோடு மோதும் வீரர்கள் யாராக இருந்தாலும் திறமைகளை குறைத்து மதிப்பிடவில்லை. எதி ராளிகளின் ஆட்டத்தை கூர்ந்து கவ னித்து பகுப்பாய்வு செய்து அதற் கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்  வதில் ‘வல்லவனுக்கு வல்லவன்’ அத னால்தான், 12 வயதில் இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை  வென்று சாதித்துக் காட்டினார்.  ரஷ்ய  வீரரின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைக்கும் வாய்ப்பு  17 நாட்களில் கை நழுவி போனாலும் உலகின் இரண்டாவது வீரர் இவர் தான். கடந்த ஆண்டு நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல் முறை யாக களம் இறங்கி, சொந்த மண்ணில்  உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்தோடு  ‘நம்பர் ஒன்’ வீரர்களின் வெற்றிக்கு ‘கடிவாளம்’ போட்டு சொப்பனமாக விளங்கினார் குகேஷ். 11 ஆட்டத்தில் 9 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்று கொடுத்தார். அடுத்த சில மாதங்களில், செஸ்  உலகின் ராஜாவும் 5 முறை உலக  சாம்பியன் பட்டத்தை வென்றவரும்  உலகின் ‘நம்பர் ஒன்’ வீரருமான  நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல் சனை எதிர்த்து விளையாடினார் குகேஷ். வெள்ளை காய்களுடன் ஆட்டத்தை துவக்கிய அவர், எவ்வித அழுத்தத்தையும் உணரவில்லை. தனக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்  டும் கவனமாக காய்களை நகர்த்தி னார். சாதகமான சூழல் உருவானது. உலக சாம்பியனை வீழ்த்திய மிக இளம் வயது இந்திய வீரர் என்கிற வரலாறு படைத்தார்.

குருவை மிஞ்சிய சிஷ்யன்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் முதல் முறையாக உலக தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் நுழைந்தார் குகேஷ். தனது அதிரடி  ஆட்டத்தால் உலகத்தை தனது பக்  கம் திருப்பினார். 15 மாதங்களி லேயே தன்னுடைய அபாரமான திற மையால் முதல் 10 இடங்களுக்கு நுழைந்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பு இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இந்த சாதனைக்கு சொந்தக்  காரர்களாக இருந்தனர். கடந்த ஜூலை மாதம் 2750 புள்ளி களை வேகமாக அடைந்த செஸ் ஜாம்பவான் கார்ல்சனை பின்னுக்கு தள்ளி, குறைந்த வயதில் 2750 தர வரிசை புள்ளிகளை கடந்த இளைய வீரரானார் குகேஷ், உலக செஸ் தர வரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்  திற்கும் முன்னேறினார். 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற தனது வழிகாட்டி யான ( குரு) விஸ்வநாதன் ஆனந்த்,  1986 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தி யாவின் ‘நம்பர் ஒன்’ வீரராக இருந்து வந்தார். அவரது 37 ஆண்டுகால சாதனை சாம்ராஜ்ஜியத்தை 17 வய தில் தகர்த்து சாதனை படைத்த சென்னை வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரு கின்றனர். குகேஷ், தனது அசாத்திய திறமை யால்  உலகின் முதல் 10 தரவரிசை யில் இடம் பிடித்து இளம் வீரர்களுக்கு  புது உத்வேகமும் தமிழ்நாட்டுக்கு பெருமையும் சேர்த்திருக்கிறார்.

- சி.ஸ்ரீராமுலு