திருச்சி தலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா
திருச்சிராப்பள்ளி, அக். 7-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழாவையொட்டி, திருச்சிராப்பள்ளி தலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் நடந்த மாவட்ட மாநாட்டில், பெண்கள் கிளையின் சார்பில், புத்தக வெளியீட்டு விழா நடந்தது.  விழாவிற்கு கவிஞர்கள் சிவ. வெங்கடேஷ், இளங்குமரன், சீத்தா ஆகியோர் தலைமை தாங்கினர். அஞ்சலி தீர்மானத்தை சரவணன் வாசித்தார். கவிஞர் சுஜாதா சஞ்சய் குமார் வரவேற்புரையாற்றினார். கிருஷ்ணமூர்த்தி, இளையராஜா, பொன்னி, சந்திரா ஆகியோர் பாடல்கள் பாடினர். மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் களப்பிரன் தொடக்கவுரையாற்றினார். கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி இயக்குனர் மற்றும் செயலாளர் அருட்பணி சூ.லூயிஸ் பிரிட்டோ வாழ்த்துரை வழங்கினார். “திருச்சிராப்பள்ளி கவிஞர்கள்- 50, கவிதைகள் -50’’ புத்தகத்தை ஆசிரியர் செசிலி வெளியிட, அதனை பி.க. மாதவன் பெற்றுக்கொண்டார். கவிஞர்.வெற்றி நிலவன் எழுதிய “முதலில் பூத்த பூ குறுங்கவிதைகள்’’ புத்தகத்தை கே.நாகநாதன் வெளியிட, அதனை சுமித்ரா மாதவன் பெற்றுக்கொண்டார்.
 
 
                                    