tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாளில் உடல்தானம்

தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாளில் உடல்தானம்

திருவள்ளூர் மாவட்டத்தில்  சீத்தாராம் யெச்சூரி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் தானம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட குழுவிடம் ஒப்படைத்தனர். இதில் கட்சியின் மூத்த தோழர் கே.செல்வராஜ்,  மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு  மற்றும் எஸ்.வேல்விழி, கே.ரமா ஆகியோர்  மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம் ஆகிய இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சியும் உடல், கண் தானம் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில்  25 பேர் உடல் தானம்,  10 பேர் கண் தானத்திற்கான ஒப்புதல் படிவங்களைப் வழங்கினர். இதில் கல்லூரி மாணவி தேஜஸ்ஸ்ரீ தன்னுடைய தந்தையுடன் வந்து உடல் தானத்திற்கான படிவத்தை வழங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை-போளூர் சாலையில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர்  ப. செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்த வடிவேலு அவரது மகள் ஜான்சி ராணி இருவரும் உடல் தான உறுதிமொழி படிவத்தை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினர்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வில் 15 பேர் உடல் தானத்திற்கான  படிவத்தை பூர்த்தி செய்து கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கரிடம் வழங்கினார்.

வடசென்னை மாவட்டக் குழு அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் யெச்சூரி உருவப்படத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், அ.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உடல் தான உறுதிமொழி ஏற்றனர். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சீத்தாராம் யெச்சூரியின் படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி மாநிலத்தில்  தோழர் யெச்சூரியின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். உழவர்கரை நகரக் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்தத் தலைவர் முருகன் உட்பட 51 பேர் தங்களது உடல், உறுப்புகள், கண்களை  ஜிப்மர் மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கினர். இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், விசிக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா தாலுகா குழு சார்பில் ஆர். மணிகண்டன் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, மூத்த தோழர் டி. சந்திரன், சி. துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா. வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் என். ரமேஷ், ஏபிஎம். சீனிவாசன், கார்த்திக், இ. சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.