சேலத்தில் கலைஞர் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சென்னை, ஜூலை 15 - சேலம், அண்ணாநகர் பூங்கா முன்பு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வெண்கலச் சிலை மீது சமூக விரோத சக்திகள் கருப்பு பெயிண்ட் வீசி அவமதித்துள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு போர்த்துவது, பெரியார் - அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது, திரு வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது என்பன போன்ற அவமதிக்கும் செயல்கள் கடந்த சில வருடங்களாக நடந்து கொண்டி ருக்கின்றன. கடந்த காலத்தில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் பலரும் சங்-பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. கருத்துக்களை எதிர்கொள்வதற்கு பதிலாக கருத்தைச் சொல்லும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது, மறைந்த தலைவர்கள் என்றால் அவர்களின் சிலையை சேதப்படுத்துவது, சிலைக்கு கருப்புச் சாயம், காவிச்சாயம் பூசுவதன் மூலம் அவமதிப்பது என்பது ஒரு போக்காகவே மாறியிருக்கிறது. இது நாக ரிக சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல. எனவே, கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் களைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இத்த கைய செயல்களுக்குப் பின்னால் கலவர நோக்கங்கள் உள்ளனவா என்பதை காவல்துறை கண்டறிய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப் பிட்டுள்ளார்.