ஓலா, ஊபர் போல கூட்டுறவு துறையை மாற்ற ஒன்றிய பாஜக அரசு முயற்சி
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. குற்றச்சாட்டு
திண்டுக்கல், செப்.29– ஒன்றிய பாஜக அரசு, கூட்டுறவு துறையை ஓலா–ஊபர் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனம் மாதிரி யாக மாற்ற முயற்சி செய்து வருவதாக திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. குற்றம் சாட்டினார். திண்டுக்கல்லில் தமிழ்நாடு கூட்டு றவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) 8வது மாநில மாநாடு சனியன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டி.வின்சென்ட் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வரவேற்புரையாற்றினார். மாநில இணைச்செயலாளர் எம்.துரைச்சாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். மாநில பொதுச்செயலாளர் என். ஆர்.ஆர்.ஜீவானந்தம், மாநிலப் பொரு ளாளர் மா.சிட்டிபாபு ஆகியோர் அறிக் கை சமர்ப்பித்துப் பேசினர். தமிழ்நாடு கூட்டுறவு சம்மேளனத்தின் செயல் தலைவர் இரா.லெனின், சிஐடியு மாநி லச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் சி.பால ச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டுறவு துறையை கைப்பற்றும் முயற்சி இந்த மாநாட்டில் பேசிய ஆர்.சச்சி தானந்தம் எம்.பி., “நாடு முழுவதும் 8 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றை ஒன்றிய அரசு தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. கூட்டுறவு கொள்கையில் பெண்கள், விவசாயிகள் முன்னேற்றம் என்ற பெயரில், உண்மையில் லாபகர மான துறைகளை மத்தியப்படுத்தப் பட்ட நிறுவனங்களுக்கு மாற்றுவது தான் நோக்கம்,” என்றார். மேலும் அவர் கூறுகையில், கூட்டுறவு பல்கலைக்கழகத்துக்கான சட்ட முன்மொழிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது, 2027–2045க்குள் மேலும் 2 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு, ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைப்பும் சேவைகளை தனியார்மயமாக்கு வதும்- இவை அனைத்தும் ஒன்றிய அரசின் “ஆட்குறைப்பு –தனியார்மய” கொள்கைகளின் சான்றுகள் என சுட்டிக்காட்டினார். கூட்டுறவு துறையை பாதுகாக்க வேண்டியது அவசியம் “தமிழ்நாட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அனைத்தும் நஷ்டமடைந்த தாகக் கூறி மூடப்பட்டுள்ளன. பணியிடங் களை நிரப்பாமல் விட்டதால் துறையின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. கூட்டுறவு அமைப்புகள் மக்களுடன் இணைந்தவை; அவற்றை பாது காப்பது ஒன்றிய - மாநில அரசுகளின் கடமை” என அவர் வலியுறுத்தினார். நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவ ராக டி.பன்னீர்செல்வம், பொதுச் செய லாளராக எம்.துரைசாமி, பொருளாள ராக ஏ.சிவக்குமார், செயல்தலைவராக பி.கௌதமன் மற்றும் 17 பேர் துணை பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் பொதுவிநியோகத் திட்டத்தை தனித்துறையாக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 ஆக உயர்த்த வேண்டும். கருணை ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். குழுக் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். பாக்கெட் முறையில் பொது விநியோகப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இணைச்செயலாளர் மு.சாதிக் அலி நன்றி கூறினார்.
