tamilnadu

குழு காப்பீட்டு திட்டத்தை முடக்கிய பாஜக அரசு

குழு காப்பீட்டு திட்டத்தை முடக்கிய பாஜக அரசு

விசைத்தறி தொழிலாளர்கள் செப்.1இல் போராட்டம்

அவிநாசி, ஜூலை 20- சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு கூட்டம் ஞாயி றன்று, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ராமமூர்த்தி இல்லத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.முத்துசாமி, பொரு ளாளர் எம்.அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  திருப்பூர், கோவை, ஈரோடு  உட்பட மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான வார்மிங், சைசிங், வைண்டிங், வீவிங் உள்ளிட்ட அனைத்து விசைத்தறி தொழி லாளர்களுக்கும் குழு காப்பீடு திட்டத்தை இன்சூரன்ஸ் முறையில், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆஃப்  இந்தியாவுடன் இணைந்து 1990 முதல் 2000  ஆண்டு களுக்கு இடையே   அப்போதைய காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வந்தது.  இதற்கு வருட பிரீமியமாக 80 ரூபாயை தொழிலாளர்கள் செலுத்தினால் போதும். இத்திட்டத்தின் மூலம் விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத்தில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு ரூ.1200 உதவித்தொகையும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு இயற்கை மரணத் திற்கு ரூ.60 ஆயிரம், விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு இத்திட்டத்தை 15 வயது முதல் 50 வயது மற்றும் 50 வயதுக்கு மேற்பட் டோருக்கு என இரண்டாக பிரித்து, இத்திட்டத்தின் மூலம் இயற்கை மர ணத்திற்கு ரூ.2 லட்சம், விபத்து மரணத் திற்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் செயல் படுத்தப்படாமலேயே 2019 ஆம் ஆண்டும் முதல் நிறுத்தப்பட்டது. இதனால்  விசைத்தறி தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. எனவே உடனடியாக விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைத்தறித் தொழிலாளர்களுக்கான குழு காப்பீடு திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும். 12 மணி நேர வேலையை, 8 மணி நேரமாக மாற்றியமைத்து, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகைகள், இலவச மனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர வேண்டும். விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களையும், தொழிற்சங்கங்களையும் அரசு நிர்வாகம் நேரில் அழைத்துப்பேசி கூலி உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். வகுப்புவாத இந்துத்துவா சக்திகளை அம்பலப்படுத்தி மக்கள் ஒற்றுமையை தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். நலவாரியப் பயன்கள் தடையில்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டிக்கொடுமையால் நடக்கும் தற்கொலைகளை தடுத்து, கந்துவட்டிக்கு எதிரான சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.1 ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.