நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தொடங்கியதுமே பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேச பாஜகவி னரின் இடையூறு தொடர்ந்துகொண்டே இருக்க, வாய்ப்பு கொடுத்தார். அப்போது நயினார் நாகேந்தி ரன், “மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசும்போது, கடந்த முறை சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப் பட்டதாகக் கூறினார். ஆனால் நாங்கள்தான் அன்று வெளிநடப்பு செய்துவிட்டோமே” என்றார். அதற்கு விளக்கம் அளித்த பேரவைத் தலைவர், “நீங்கள்தான் வெளிநடப்பு செய்தீர்களே தவிர, மற்றபடி மசோதா ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டது” என்றார். தொடர்ந்து அவர் நீட் மசோதாவை தாங்கள் எதிர்ப் பதாகப் பேச ஆரம்பித்தார். குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, “வெளிநடப்பு செய்வது என்றால் செய்யுங்கள். அதற்கு எதுக்கு இவ்வளவு பில்டப்?” என்றார். உடனே அவையில் சிரிப்பொலி எழுந்தது. அதனைத் தொடர்ந்து. பாஜக உறுப்பினர்கள் அனை வரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.