பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட வேண்டும்
தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக - தேர்தல் ஆணை யத்தின் கள்ளக் கூட்டணி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை நீக்கியுள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடர் விசாரணையாக நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று பீகாரில் 65 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில், தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில்,”65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை யாரும் கேட்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதி சட்டத்தில் இல்லை” என கூறப்பட்டு இருந்தது. இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய் யப்பட்டப் பின்பு செவ்வாய்க்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வு, “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெய ரில் வாக்குகள் நீக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை (5 கோடி) மேலும் அதிகரிக்கும் என்ற வாதம் உள்ளது. அதனால் 5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என எச்சரிக்கை விடுத்தது.
தேர்தல் ஆணையத்திற்கு குட்டு
தொடர்ந்து இந்த வழக்கு வியாழனன்று நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய் மால்யா பாக்சி அமர்வு முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது எத்தனை வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தல் ஆணை யம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி,”65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்படவில்லை. 22 லட்சம் பேர் உயிரிழந்ததால் நீக்கப்பட்டனர். அதே நேரம் உயிருடன் இருப்பவர்களில் மரண மடைந்துவிட்டதாக நீக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேர்தல் அதிகாரிகளை அணுகி இதைச் சரிசெய்யலாம்” எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்து குறுக்கிட்ட நீதிபதிகள்,“நாங்கள் கேட்பது அதிக வெளிப் படைத்தன்மை. முழு தகவல்களையும் இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். மக்கள் தேர்தல் ஆணைய இணையதளங்களுக்குச் சென்று தங்கள் பெயர்களை உள்ளதா என்பதைச் சரிபார்க்கும் வகையில் இருக்க வேண்டும். நாங்கள் இந்த இணையதளத்திற்குச் சென்றால், எங்களது பெயர் எளிதாக சோதனை செய்யும்படி இருக்க வேண்டும். இந்தப் பட்டியல் வாக்காளர் அடை யாள எண்களைப் பயன்படுத்தித் தேடக்கூடிய வகையில் இருக்க வேண்டும்” என்று உத்தர விட்டனர்.
3 நாட்கள் அவகாசம்
தொடர்ந்து,”பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்க ளின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட வேண்டும். நீக்கப்பட்ட காரணத்தையும் தெளி வாகக் குறிப்பிட வேண்டும். மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும். அனைத்து வாக்காளரும் இதை அணுகும் வகையில் பட்டியல் இருக்க வேண்டும். தவறாக நீக்கப்பட்டவர்கள் தங்கள்
ஆதார்
அட்டையின் நகலுடன் கோரிக்கைக ளைச் சமர்ப்பிக்கலாம்” என உச்சநீதிமன்ற நீதி பதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்கா ளர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்க றிஞர் உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளி வைத்தனர். ஆதார் முன்னதாக வாக்காளர் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஆதாரை ஆவணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்க ளும் ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினர். இத்த கைய சூழலில் தவறாக நீக்கப்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையின் நகலுடன் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படு கிறது.