பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்க விவகாரம் ஆதாரை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, செப். 8 - பீகாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத் தம் (Special Intensive Revi sion- SIR) என்ற பெயரில், குறிப்பிட்ட பகுதி மக்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறித்தது. இத னால், பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.9 கோடியி லிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது. 65 லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டிய லிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து, ஜன நாயக சீர்திருத்த சங்கம், பியுசிஎல் உள்ளிட்ட அமைப்புக்கள் மற்றும் ஆர்.ஜே.டி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட செயற் பாட்டாளர்கள் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக் கில், வாக்காளர் பட்டியலி லிருந்து நீக்கப்பட்டோரின் விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பீகா ரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், வசிப்பிடச் சான்றுக்கான ஆதாரமாக, தேர்தல் ஆணை யம் ஏற்கனவே உள்ள 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு முன்பு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 7.24 கோடி வாக்கா ளர்களில் 99.5 சதவிகிதம் பேர் தங்கள் தகுதி ஆவணங் களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரி வித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், மஜ்லீஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இதர மனுதாரர்களும் தங் களின் பதிலைச் சமர்ப்பித்த னர். அவற்றைப் பரிசீலித்த நீதிபதிகள், “பீகாரில் வாக் காளர் பட்டியலில் பெயர் களைச் சேர்ப்பதற்கு, ஆதார் அட்டையை 12-ஆவது ஆவ ணமாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும், “வாக்காளர் கள், ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். எனினும் ஆதார் அட்டையின் நம்பகத் தன்மை மற்றும் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க அதி காரிகளுக்கு உரிமை உண்டு ஆதார், சட்டப்பூர்வ அந்த ஸ்தைப் பெற்றிருந்தாலும் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல” என்ற நீதிபதிகள், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 23(4)-ன்படி ஆதார் ஒரு அடையாளச் சான்று. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, பிற 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள் வது குறித்து தேர்தல் ஆணையம், அதிகாரி களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவிற்கேற்ப, ஆதார் அடையாள அட்டை யை ஆவணமாக ஏற்றுக் கொள்வதற்கான வழிமுறை கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன் றத்தில் உறுதி அளித்தது.