tamilnadu

img

தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டி 3 தங்கம், ஒரு வெண்கலம் வென்று பரணி வித்யாலயா மாணவர்கள் சாதனை

தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டி  3 தங்கம், ஒரு வெண்கலம் வென்று பரணி வித்யாலயா மாணவர்கள் சாதனை

கரூர், ஜூலை 5 - அண்மையில் நிறைவு பெற்ற தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி யில் படித்து வரும் மாணவி யாழினி ரவீந்திரன் 3 தங்கப் பதக்கமும், ஸ்ரீவத்சன் ஒரு வெண் கலப் பதக்கமும் வென்று அபார சாதனை படைத்துள்ளனர்.  ஹரியானாவில் நடைபெற்ற  20 ஆவது தேசிய விளையாட்டுப்  போட்டிகளில் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில், கரூர்  பரணி வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த யாழினி 18 வயதிற்குட் பட்டோர் பிரிவில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்றார். அதில் குழு பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2 தங்கப் பதக்கமும், மாணவர் ஸ்ரீவத்சன் குழு பிரிவில் வெண் கலப் பதக்கமும் வென்று அபார சாதனை படைத்துள்ளனர். மேலும் தென் கொரியாவில் நடைபெறும் சர்வதேச சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி களில் கலந்து கொள்ளும் இந்திய  சாப்ட் டென்னிஸ் அணியில் யாழினி ரவீந்திரன் இடம் பெற்று உள்ளார். தேசிய அளவில் சாதனை படைத்து கரூருக்கும் தமிழகத்திற் கும் பெருமை சேர்த்த யாழினி  ரவீந்திரன், ஸ்ரீவத்சன் ஆகியோ ருக்கு பரணி வித்யாலயா பள்ளி யில் பாராட்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணிக்  கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ர மணியன், முதல்வர் எஸ்.சுதா தேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா ஆகியோர் மாணவ, மாண வியை வாழ்த்தி பேசினர். இதில் ஆசியர்கள், மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.