tamilnadu

img

வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்காததால் மதுரையில் மாணவி தாரணி தற்கொலை.... நடவடிக்கை எடுக்க எஸ்எப்ஐ கோரிக்கை....

மதுரை:
கல்விக் கடனுக்காக காப்புத் தொகை, ஆவணத்தொகை ஆகியவை செலுத்தியும் வங்கி நிர்வாகம் கடன் வழங்காததால் மதுரை மாணவி தாரணி வெள்ளியன்று தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.

மதுரை தெப்பகுளம், தேவிநகர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாணவி தாரணி. இவர் கல்லூரிப்படிப்பிற்காக வங்கியில் கல்விக்கடன் பெறவிண்ணப்பித்திருந்தார். இதற்காக காப்புத் தொகை,ஆவணக்கட்டணமாக ரூ.1,27,000 செலுத்தினார்.ஆனால் இவருக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டது.இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து தாரணியின் தாய் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், “ எனது கணவர் காசிராஜன்  மூன்றரை வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.எனக்கு  தாரணி (19) என்ற மகளும், கிஷோர் என்ற(17) மகனும் உள்ளனர். தாரணி சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேஷன் டெக்லானஜி படித்து
வந்தார். கொரேனா காலம் என்பதால் தற்போது வீட்டில் உள்ளார். நான் பலசரக்குக் கடை நடத்தி வருகிறேன். கல்விக்கடனுக்காக ரூ.60 ஆயிரம் ரூ.18 ஆயிரம், ரூ.26 ஆயிரம் என கொடுத்துள்ளார். மேலும்ரூ.23 ஆயிரம் மஞ்சுளா என்பவரிடம் கடன் வாங்கி அனுப்பியுள்ளார். இருப்பினும் கல்விக்கடன் ரூ. 6,65,100 கிடைக்கவில்லை. ஏப்ரல் 9-ஆம் தேதிநானும் எனது மகன் கிஷோரும் கடைக்கு பொருட்கள்வாங்க கீழமாசிவீதிக்கு வந்துவிட்டோம். வீடுதிரும்பியபோது எனது மகள் தாரணி படுக்கையறை
யில்  உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். எனது மகள் கல்விக்கடன் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 15- ஆம் தேதி மக்களவையில், கல்விக்கடன் தொடர்பான கேள்விக்கு, கல்விக்கடன்பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் கல்விக் கடன் மறுக்கப்பட்டதால் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                           ****************

வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க எஸ்எப்ஐ கோரிக்கை

காப்புத் தொகை செலுத்தியும் கல்விக் கடன் தர மறுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாக அமைந்த வங்கி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிக்கை விடுத்துள் ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.டி.கண்ணன்,மாநிலச் செயலாளர் வீ.மாரியப் பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை மாவட்டம் மாரியம்மன்தெப்பக்குளம் பகுதியைச் சார்ந்த மாணவி தாரணி தனது உயர் கல்விக்காக ரூபாய் 6,65,100 வரை வங்கியில் கல்விக் கடன் கேட்டு சமீபத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கான சான்று மற்றும் காப்பு தொகையாக ரூபாய் 50,000க்கு மேல் தனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இந்நிலையில் வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துள்ளது. வங்கிக் கடன் கிடைக்காதநிலையில் மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வெள்ளியன்று (9.4.21) மாலை 5 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றசெய்தி சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகார் மூலம்தெரியவந்துள்ளது.ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு லெனின் என்ற மாணவன் வேலை கிடைக்காததால் வாங்கியவங்கி கடனை  செலுத்த முடியவில்லை  ஸ்டேட் பேங்க் நிர்வாகம் ரிலையன்ஸ் அடியாட்கள் மூலம் மிரட்டியதால் இதே மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக் கது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கி பணங்களை வாரி வழங்கிவெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைக்கும் இந்திய வங்கிகள் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கடனை தர மறுப்பதோடு, கொடுத்த கடனையும் வட்டியும் முதலுமாக கறாராக வசூல் செய்கிறது.இந்திய அரசின் வரி வருவாய்மற்றும் வங்கி கணக்கில் உள்ளஅனைத்து பணங்களும் சாதாரணமக்களின் வியர்வையில் சேர்ந்ததாகும். எந்த பெரும் முதலாளிகளும் முறையாக வரியோ, கடனோ செலுத்தியது கிடையாது.கல்விக் கடன் பெறும் சாதாரண வீட்டு குழந்தைகள் படித்துமுடித்து நமது இந்திய பொருளாதாரத்தை வளர்க்கவே பாடுபடப்போகிறார்கள் என்ற அடிப் படை அறிவுகூட இல்லாமல் நடந்துகொள்ளும் அனைத்து வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை மாணவியின் தற்கொலைக்கு காரணமான வங்கிநிர்வாகத்தின் மீது மத்திய, மாநிலஅரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் நிபந்தனையின்றி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கிட வேண்டும் என தமிழக மாணவர்களின் சார்பில் கேட் டுக்கொள்கிறோம்.

;