states

img

மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் எஸ்எப்ஐ மாபெரும் வெற்றி.... மொத்தமுள்ள 14 இடங்களையும் அள்ளியது....

மஞ்சேரி:
மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் அபார வெற்றி பெற்றுள்ளது. கல்லூரியில் மொத்தமுள்ள 14 இடங்களையும் எஸ்எப்ஐ அணியே கைப்பற்றியுள்ளது. 

சி.எச். அபிமன்யு மாணவர் சங்கத் தலைவராகவும், கே ஆஷ் துணைத் தலைவராகவும் தேர்வாகி உள்ளனர். இதேபோல ஜெயந்து (துணைத் தலைவர்), எச். ஹஸ்னா (பொதுச் செயலாளர்), ஜுமனா சாதிக் (இணைச் செயலாளர்), கே.எஸ். அகில் (நுண்கலை செயலாளர்), எம்.எஸ். அருண் (விளையாட்டு செயலாளர்), ஆர். ஸ்ரக்தா (பத்திரிகை ஆசிரியர்) அனுவின் ஹரிஷ் (பல்கலைக்கழக யூனியன் கவுன்சிலர்) ஆகியோரும் பல்வேறு பொறுப்புக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.கடந்த முறை, எஸ்எப்ஐ குழு போட்டியின்றி 12 இடங்களையும் வென்றது. 

;