கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
தேனி ,செப்.12- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் . தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 10 ஆம் தேதி அருவி பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. செப்டம்பர் 11ஆம் தேதி நீர்வரத்து சீராகியதால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் தடையும், அனுமதியும் தொடர்வதால் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. ஆகவே வனத்துறை இணையதளத்திலும் இது குறித்த விவரங்களை உடனுக்குடன் வெளியிட்டால் வழியிலே பயண மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.