திருவண்ணாமலை மாநகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்: சிபிஎம்
திருவண்ணாமலை,செப்.16- திருவண்ணாமலை மாநகரத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநகர ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாநகரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறைப் படுத்த வேண்டும், கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வேண்டும், தாமரை நகர் பகுதியில் சாலைகளுக்கு பெயர் ஏற்படுத்த வேண்டும், மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களின் வீடுக ளுக்கு வரி விதிப்பு, குடி நீர் இணைப்பை ரத்து செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாநகர செய லாளர் எம்.பிரகலாதன், மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, நகர நிர்வாகிகள் கௌரி, கல்யாண சுந்தரம், பழனி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.