தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் தனியார் ஸ்டேஷனரியில் 20 கிலோ கேரி பேக், 5,000 கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், எஸ்.ஐ பரமசிவம், பணியாளர்கள் பங்கேற்றனர்.
 
                                    