மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவி
ராணிப்பேட்டை, செப். 16 – ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 642 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 8128 உறுப்பினர்களுக்கு ரூ.72.16 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் இணைப்பு, 4464 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ந.செந்தில் குமரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அசோக், அனிதா குப்புசாமி, நகரமன்ற தலைவர்கள் ஹரிணி தில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், தமிழ்ச்செல்வி அசோகன், குல்ஜார் அஹமது, பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், உதவி திட்ட அலுவலர்கள், வட்டாட்சியர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
