tamilnadu

img

ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்

ராஜராஜ சோழனின் 1040 ஆவது  சதய விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்

தஞ்சாவூர், அக். 21-   தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழாவை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்த விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் வரும் அக்.31, நவ.1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூடிய நாளான ஐப்பசி சதய நாளை, ஆண்டுதோறும் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  நடப்பாண்டு, மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழா வரும் 31 ஆம் தேதி காலை தொடங்குகிறது. அன்று மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து, பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். சதய விழா நாளான நவ.1 ஆம் தேதி காலை, மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த சதய விழாவை முன்னிட்டு, பெரிய கோவிலில் செவ்வாய்க்கிழமை பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.  இந்நிகழ்வில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழுத் தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, உறுப்பினர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, வெற்றி தமிழர் பேரவை இரா. செழியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.