நீதிபதி மீது விமர்சனம் ஓய்வு பெற்ற காவலருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை: தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27 ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கரூர் துயர சம்பவத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பான விசா ரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தவெக தலை வர் விஜய் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அதனால் வழக்கை விசாரித்த நீதிபதி மீது சமூக வலை தளத்தில் அவதூறு பரப்பும் விதமாக பலரும் கருத்து களை பதிவிட்டு வந்தனர். இதனால், அவதூறு பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். அந்த வகையில், கரூர் சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவலர் வரதராஜனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அக்.7 ஆம் தேதி கைது செய்து சிறை யில் அடைத்தனர். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “அரசியல் உள்நோக்கத்து டன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வதால், ஜாமீன் வழங்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கார்த்தி கேயன் முன்பு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறை, அரசி யல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது அவதூறாக கருத்து களை பதிவிடும் போக்கு அதிகரித்து வருவதால், ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரதராஜ னின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.