அரசு மேல்நிலைப்பள்ளியில் இணைய வழி மோசடிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாகர்கோவில், அக். 2- வங்கிகளில் இணைய வழி மூலம் நடக்கும் மோசடி கள் குறித்த விழிப்புணர்வு கருத்ரங்கம் ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ராஜாக்கமங்கலம் அரசு.மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் என்எஸ்எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவர் மாணவிகளுக்கு இணைய வழி நடை பெறும் வங்கி மோசடிகள் குறித்து முன்னாள் வங்கி அதிகாரி அகமது உசேன் விழப்புணர்வு கருத்துகளை மாணவ, மாணவிகளிடம் விளக்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.பி. பெருமாள், தலைமை ஆசிரியர், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் என்எஸ்எஸ் முகாம் மாணவ மாணவி களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.